உடல் எடை குறைக்க உதவும் உப்பு

உடல் எடை குறைக்க உதவும் உப்பு

2 mins read
91b93bfc-4ac6-4395-b311-89c0327c31d0
உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு உப்பை உட்கொள்வது பலனளிக்கும் என்று அறிவுரை வழங்கப்படுகிறது. படம்: இணையம் -

ஆரோக்­கி­ய­மான முறை­யில் உடல் எடை­யைக் குறைக்க உடற்­ப­யிற்சி செய்­வ­தும் நல்ல உண­வுப் பழக்­கங்­கள் இருப்­ப­தும் அவ­சி­யம் என்­பது அனை­வ­ருக்­கும் தெரிந்­ததே. உடற்­ப­யிற்சி செய்­வ­தற்கு முன்பு சிறி­த­ளவு உப்பை உட்­கொண்­டால் அது மேலும் உத­வி­யாக இருக்­கும் என்­பது உங்­க­ளுக்­குத் தெரி­யுமா?

உடற்­ப­யிற்சி செய்­வ­தற்கு முன்பு துளி­யளவு உப்பை உண்­டாலே போதும்.

கடு­மை­யான உடற்­ப­யிற்சி செய்­யும்­போது உட­லில் உள்ள நீரின் அளவு வெகு­வா­கக் குறை­யும். அத­னால்­தான் உடற்­ப­யிற்சி செய்­த­வு­டன் பலர் மள­ம­ள­வென்று அதிக அள­வில் தண்­ணீரை அருந்­து­வர்.

உட­லில் நீரின் அளவு அதி­கம் குறை­யா­மல் இருக்க உப்பு உத­வு­கிறது. சிறு­நீர் கழிப்­பது, வியர்வை சிந்­து­வது போன்­ற­வற்­றின் மூலம் உட­லி­லி­ருந்து அள­வுக்­க­தி­கமான நீர் வெளி­யாவதை உப்பு தவிர்க்­கிறது.

தண்­ணீ­ரில் சிறி­த­ளவு உப்­பைச் சேர்த்துக்­கொள்­வ­தும் உடற்­ப­யிற்சி செய்­வோ­ருக்­குப் பல­ன­ளிக்­கும். அதன் மூலம் உட­லின் ரத்த ஓட்­டம் மேம்­படும் எனத் தெரி­விக்­கப்­பட்டுள்ளது.

அதோடு, உடற்­ப­யிற்சி செய்­யும்­போது ஒரு­வர் உடலை அதி­கம் வறுத்­திக்­கொள்­ளா­மல் இருக்­க­வும் உப்பு கைகொடுக்கிறது. இதன் மூலம் உடற்­ப­யிற்சி செய்யும்போது ஒருவரின் ஆற்­றல் மேம்­படும்.

இத­னால், உடற்­ப­யிற்சி செய்­ப­வ­ரின் வலி­யைத் தாங்­கிக்­கொள்­ளும் சக்­தி­யும் மெரு­கூட்­டப்­ப­டு­கிறது. இதற்­கா­கவே விளை­யாட்டா­ளர்­கள் பலர் போட்­டி­களில் கள­மிறங்கு­வ­தற்கு முன்பு உப்பை உட்­கொள்­கின்­ற­னர்.

உடற்­ப­யிற்சி செய்­யும்போது உட­லின் தசை­கள் சோர்­வ­டை­யும். அப்­போது சில வேளை­களில் 'மசல் கிராம்ப்ஸ்' எனப்­படும் தசை இறுக்கம் ஏற்­பட வாய்ப்­புள்­ளது. உப்­பி­னால் உட­லின் ரத்த ஓட்­டம் மேம்­ப­டும்­போது இது­போன்ற தசை இறுக்கம் ஏற்­ப­டு­வ­தற்­கான வாய்ப்பு­களும் குறை­யும்.

அதிக உடற்­ப­யிற்சி செய்­யும் பெரி­ய­வர்­களின் ரத்­தத்­தில் உப்­பின் அளவு அதி­கம் குறை­யக்­கூ­டும். 'ஹைப்­போ­னட்­ரீ­மியா' எனும் இந்­தப் பிரச்­சி­னைக்­குத் தீர்­வும் உடற்­பயிற்சிக்கு முன்பு உப்பை உண்­பதே.

சிறி­த­ளவு உப்­பி­னால் உடல் எடையைக் குறைக்க விரும்­பு­வோ­ரும் உடற்­ப­யிற்சி­யில் நாட்­டம் இருப்­போ­ரும் அனுபவிக்கக்கூடிய பலன்­களை 'டைம்ஸ் ஆஃப் இந்­தியா' செய்தி நிறு­வ­னம் விவ­ரித்­தி­ருந்­தது.