மீண்டும் வந்துவிட்டது தேசிய நூலக வாரியம் நடத்தும் சிறப்பு புத்தக நன்கொடை இயக்கம். தேசிய வாசிப்பு இயக்கத்தின் ஓர் அங்கமாக 'ரீட் ஃபோர் புக்ஸ்' என்றழைக்கப்படும் 'புத்தகங்களுக்காக வாசியுங்கள்' எனும் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
வாசிப்புப் பழக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வசதி குறைந்தோருடன் வாசிப்புப் பழக்கத்தினால் வரும் இன்பத்தைப் பகிர்ந்துகொள்ளவும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
இணையம்வழியாகவோ நேரில் சென்றோ இம்முயற்சியில் பங்கேற்க நிறுவனங்களுக்கும் அமைப்புகளுக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது.
இதன்கீழ் அடுத்த மாதம் முதல் தேதியலிருந்து 31ஆம் தேதிவரை 15 நிமிடங்களுக்கு வாசிக்கும் ஒவ்வொரு 10 பேருக்கும் ஒரு புத்தகம் வசதி குறைந்த சிறுவர்களுக்கான 'வொண்டரீட்' வாசிப்பு இயக்கத்திற்கும் 'மைகிரண்ட் வொர்க்கர் லைப்ரரி' எனும் வெளிநாட்டு ஊழியர் நூலகத்திற்கும் நன்கொடையாக வழங்கப்படும்.
இம்முயற்சியின் மூலம் இவ்வாண்டு மொத்தம் 1,200 புத்தகங்களை நன்கொடையாக வழங்குவது இலக்கு.
'புத்தகங்களுக்காக வாசியுங்கள்' முயற்சியில் எவ்வாறு பங்கேற்பது உள்ளிட்ட தகவல்களை https://go.gov.sg/readforbooks2022 இணைய முகவரியில் பெற்றுக்கொள்ளலாம். தனிநபர்களும் கலந்துகொள்ளலாம்.

