'சினம் கொண்டு' சிறுவனின் விரலை உடைத்த இயந்திர மனிதன்(காணொளி)

'சினம் கொண்டு' சிறுவனின் விரலை உடைத்த இயந்திர மனிதன்(காணொளி)

1 mins read
882e5447-062f-4cb7-be22-856eda1f9528
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் பங்கேற்ற சிறுவனின் விரல் எலும்பை ஓர் இயந்திர மனிதன் உடைத்தது.கோப்புப் படம்: இபிஏ -

சது­ரங்க ஆட்­டத்தில் ஏழு வயது சிறு­வ­னின் விரலை இயந்­திர மனி­தன் உடைத்­தது. இயந்­திர மனி­தன், சிறு­வ­னு­டன் அந்த ஆட்­டத்­தில் போட்டி­யிட்­டது.

ரஷ்ய தலை­ந­கர் மாஸ்­கோ­வில் நடை­பெற்ற சது­ரங்­கப் போட்டியில் இச்­சம்­ப­வம் நிகழ்ந்­தது.

சது­ரங்க ஆட்­டத்­தில் இயந்­திர மனி­தன் தனது அடுத்த அடியை எடுத்து வைப்­ப­தற்கு சிறு­வன் போது­மான நேரம் வழங்­க­வில்லை. அதற்­குப் பதி­ல­டி­யாக இயந்­திர மனி­தன் சிறு­வனின் விரலை உடைத்­தது.

இந்­தக் காட்சி பதி­வான காணொளி சமூக வலைத்­த­ளங்­களில் அதி­கம் பகி­ரப்­பட்­டது. சிறு­வன் நல­மாக இருப்­ப­தா­க­வும் அவ­ரின் விரல் எலும்பு உடைந்­த­தா­க­வும் ரஷ்ய சது­ரங்­கச் சம்­மே­ள­னத்­தின் துணைத் தலை­வர் அந்­நாட்டு அர­சாங்­கத்­திற்­குச் சொந்­த­மான 'ஆர்­ஐஏ நொவொஸ்டி'யிடம் தெரி­வித்­தார்.

விரல் உடைந்த சிறு­வ­னின் பெயர் கிரிஸ்­ட­ஃபர் என்­றும் அவர் ரஷ்­யா­வின் ஒன்­பது வய­துக்கு உட்­பட்ட ஆகச் சிறந்த சது­ரங்க வீரர்­களில் ஒருவர் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.