மின்னிலக்கச் சாதனங்களில் கூடுதல் நேரம் செலவிடும் சிறப்புத் தேவையுடைய சிறார்

சிறப்­புத் தேவை­யு­டைய சிறார் சரா­ச­ரி­யாக இரண்­டரை முதல் மூன்று வய­தில் மின்­னி­லக்­கச் சாத­னங்­க­ளுக்கு அறி­மு­க­மா­கின்­ற­னர். அவர்­க­ளு­டைய பெற்­றோ­ரில் ஏறக்­கு­றைய பாதிப் பேர், தங்­கள் பிள்­ளை­கள் மின்­னி­லக்கச் சாத­னங்­களில் கூடு­தல் நேரம் செல­வி­டு­வ­தா­கக் கரு­து­கின்­ற­னர்.

தேசிய கல்­விக் கழ­கம் மேற்­கொண்ட அண்­மைய ஆய்­வின் முடி­வு­கள் இவை. சிறப்­புத் தேவை­யு­டைய 550 சிறார் பங்­கெ­டுத்த இந்த ஆய்வு, பள்ளி நேரத்­திற்கு அப்­பாற்­பட்டு பிள்­ளை­கள் மின்­னி­லக்­கச் சாத­னங்­களில் எவ்­வ­ளவு நேரம் செல­வி­டு­கின்­ற­னர் என்­ப­தைக் கண்­ட­றிய முற்­பட்­டது.

ஆய்­வில் பங்­கெ­டுத்த சிறா­ரில் பெரும்­பான்­மை­யி­னர் (65%), நாள் ஒன்­றுக்கு இரண்டு மணி நேரத்­துக்­குக் குறை­வாக மின்­னி­லக்­கச் சாத­னங்­களில் நேரத்­தைச் செல­விட்­ட­னர். கிட்­டத்­தட்ட 23 விழுக்­காட்­டி­னர், நாள் ஒன்றுக்கு இரண்டு முதல் நான்கு மணி நேரம் வரை திரை முன்னால் அமர்ந்­தி­ருந்­த­னர்.

எஞ்­சிய 10 விழுக்­காட்­டி­னர், வீட்­டில் அன்­றா­டம் நான்கு மணி நேரத்­துக்­கும் அதி­க­மாக மின்­னி­லக்­கச் சாத­னங்­களில் நேரம் செல­விட்­ட­னர்.

மின்­னி­லக்­கச் சாத­னத் திரை முன்­னால் தங்­கள் பிள்­ளை­கள் செல­வி­டும் நேரத்­தைக் கட்­டுப்­படுத்த தங்­க­ளுக்கு உதவி தேவைப்­ப­டு­வ­தாக மூன்­றில் ஒரு பங்கு பெற்­றோர் கரு­தி­னர்.

தொடக்­கப்­பள்ளி வய­தி­ன­ரான சிறப்­புத் தேவை­க­ளு­டைய சிறா­ரி­டையே மின்­னி­லக்க ஊட­கப் பயன்­பாடு குறித்து இங்கு ஆரா­யும் முதல் ஆய்வு இது. ஆய்­வில் பங்­கெ­டுத்த 550 சிறார், ஆறு முதல் 11 வய­துக்கு உட்­பட்­ட­வர்­கள். அவர்­கள் 49 தொடக்­கப்­பள்­ளி­க­ளி­லும் 13 சிறப்­புக் கல்வி பள்­ளி­க­ளி­லும் பயில்­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!