'வயதுக்கும் மறதிக்கும் தொடர்பில்லை'

'வயதுக்கும் மறதிக்கும் தொடர்பில்லை'

4 mins read
f33c4c46-e8b8-46aa-858c-bae3bad9cdde
அன்றாடம் சில எளிய பயிற்சிகளைச் செய்தாலே வயதானாலும் நினைவுத்திறன் குன்றாமல் வாழ முடியும் என்கிறார் மருத்துவர் ரிச்சர்ட் ரெஸ்டேக். படம்: நியூயார்க் டைம்ஸ் -

பொது­வா­கவே வய­தாக ஆக, நம் நினை­வாற்­றல் குன்­றும் என்­பது நம்­மில் பல­ரின் அசைக்­க­மு­டி­யாத கருத்­தாக இருக்­கிறது.

இது தவ­றான ஊகம் என்­கி­றார் மூளை நரம்­பி­யல் வல்­லு­நர் ரிச்­சர்ட் ரெஸ்­டேக். அமெ­ரிக்­கா­வின் ஜார்ஜ் வாஷிங்­டன் பல்­க­லைக்­க­ழக மருத்­து­வக் கல்­லூ­ரிப் பேரா­சி­ரி­ய­ரான அவர், நினை­வாற்­றல் குறை­வ­தைத் தவிர்க்­க­லாம் என்­கி­றார்.

நினை­வாற்­றல் பிரச்­சி­னை­யால் அவ­தி­யுற்ற நோயா­ளி­க­ளுக்கு வழி­காட்­டு­வ­தில் பல்­லாண்டு அனு­ப­வம் வாய்ந்த அவர், இதன் தொடர்­பில் 20க்கும் மேற்­பட்ட நூல்­க­ளை­யும் எழு­தி­யுள்­ளார்.

அவர் அண்­மை­யில் வெளி­யிட்ட நூலின் தலைப்பு, 'த கம்ப்­ளீட் கைட் டு மெமரி: த சயின்ஸ் ஆஃப் ஸ்ட்­ரென்­த­னிங் யுவர் மைண்ட்' என்­ப­தா­கும்.

இதில் மூளைக்­கான பல்­வேறு பயிற்­சி­கள், தூக்­கம் தொடர்­பான பழக்­கங்­கள், நினை­வாற்­ற­லைத் தூண்­டும் உண­வு­கள் போன்­ற­வற்­றைப் பகிர்ந்­துள்­ளார்.

அறிவு, கவ­னக் குவிப்பு, சாதனை ஆகி­ய­வற்­று­டன் தொடர்­பு­டைய நினை­வாற்­றலை அன்­றா­டம் வலுப்­ப­டுத்­து­வது அவ­சி­யம் என்­கி­றார் டாக்­டர் ரெஸ்­டேக்.

முது­மை­யால் நினை­வாற்­றல் குறை­வ­தில்லை என்று வாதி­டும் அவர், அதனை இழக்­கக் கார­ண­மான பத்து நட­வ­டிக்­கை­களை 'பாவச் செயல்­கள்' என்று குறிப்­பிடு­கி­றார்.

புகழ்­பெற்ற உள­வி­யல் வல்­லு­நர் டேனி­யல் ஷேக்­டர் விவ­ரித்த ஏழு பாவச் செயல்­கள் அதா­வது, செய்ய வேண்­டி­ய­வற்­றைச் செய்­யா­மல் இருப்­ப­தும் செய்­யக்கூடா­த­தைச் செய்­வ­தும் இவற்­றில் அடங்­கும்.

நிலை­யற்­ற­தன்மை, தன்னை மறந்து சிந்­த­னை­யில் மூழ்­கு­தல், தற்­கா­லிக மறதி, தவ­றான தக­வல் உள்­ளீடு உள்­ளிட்ட அந்த ஏழு செயல்­க­ளு­டன் தொழில்­நுட்ப ரீதி­யில் உண்­மை­யைத் திரித்­துக் கூறு­தல், தொழில்­நுட்ப திசை­தி­ருப்­பல், மன உளைச்­சல் என, டாக்­டர் ரெஸ்­டேக் மேலும் மூன்­று அம்சங்களைச் சேர்த்­துள்­ளார்.

பொது­வாக மனி­தர்­கள் நினை­வாற்­ற­லைக் கட்­டிக்­காக்க என்ன செய்­ய­லாம் என்­ப­தை­யும் அவர் பட்­டி­ய­லிட்­டுள்­ளார்.

கூடு­தல் கவ­னம் செலுத்­து­தல்

சில வகை மற­திக்கு, முறை­யாக நாம் கவ­னம் செலுத்­தா­ததே கார­ணம். உண்­மை­யில் இவை நினை­வாற்­றல் பிரச்­சி­னை­களே அல்ல. சான்றாக, நிகழ்ச்சி ஒன்­றில் சந்­தித்­த­வ­ரின் பெயரை மறந்­து­விட்­டீர்­கள் என்­றால் அந்த நேரத்­தில் சில­ரு­டன் பேசிக்­கொண்­டி­ருந்­த­தால் அவர் பெயரை சரி­யா­கக் கேட்­டுக்­கொள்­ள­வில்லை என்று பொருள்.

போதிய கவ­னம் செலுத்­தாமை என்­பது நினை­வாற்­றல் சிக்­கல்­களுக்­கான ஆகப் பெரிய கார­ணம் என்­கி­றார் டாக்­டர் ரெஸ்­டேக்.

ஒரு வார்த்­தையை படத்­து­டன் இணைத்து நினை­வில் பதிக்க முய­ல­லாம். எடுத்துக்காட்டாக, டாக்­டர் கிங் என்­ப­வரை நினை­வில் பதித்­துக்­கொள்ள மருத்­து­வ­ரின் வெள்ளை அங்கி, தலை­யில் மகு­டம், கையில் செங்­கோ­லுக்­குப் பதில் ஸ்டெ­தஸ்­கோப் கருவி என்று அவ­ரது உரு­வத்தை கற்­பனை செய்து­கொள்­ள­லாம்.

அன்­றாட நினை­வாற்­றல் சவால்­கள்

வழக்­க­மான இடை­வெ­ளி­யில் அன்­றாட வாழ்க்­கை­யு­டன் தொடர்­பு­டைய சில நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ள­லாம்.

மளி­கைக் கடைக்­குச் சென்ற உடனே பொருட் பட்­டி­யலை எடுக்­கா­மல், நினை­வில் இருந்தே வேண்­டிய பொருள்­களை எடுக்க முய­ல­லாம். பின்­னர் நீங்­கள் எழு­தி­வந்த பட்­டி­ய­லு­டன் அவற்றை ஒப்­பிட்­டுச் சரி­பார்க்­க­லாம்.

விளை­யாட்­டு­கள்

சது­ரங்­கம் போன்ற விளை­யாட்டுகள் நினை­வாற்­றலை அதி­க­ரிக்க உத­வும்.

நீங்­க­ளா­கவே சில விளை­யாட்டுகளை உரு­வாக்­கிக் கொள்­ள­லாம். எடுத்­துக்­காட்­டாக, அமெ­ரிக்க அதி­பர்­கள் ஃபிராங்­ளின் ரூஸ்­வெல்ட் முதல் ஜோ பைடன் வரை எழுத வேண்­டும். பிறகு கீழி­ருந்து மேலாக பைடன் முதல் ரூஸ்­வெல்ட் வரை எழு­திப் பழ­க­வேண்­டும். அதன் பிறகு ஜன­நா­ய­கக் கட்சி அதி­பர்­கள் பெயரை மட்­டும் அல்­லது குடி­ய­ர­சுக் கட்சி அதி­பர்­களை மட்­டும் எழுத வேண்­டும்.

குறிப்­பிட்ட தக­வல்­களை வெவ்­வே­றா­கப் பட்­டி­ய­லிட உத­வும் இந்த முறை நினை­வாற்­றலை அதி­க­ரிக்­கும்.

நாவல் வாசித்­தல்

நாவல் வாசிக்­கும் பழக்­கம் நினை­வாற்­ற­லைத் தக்­க­வைத்­துக் கொள்ள உத­வும்.

குறிப்­பாக, புனைவு வகை நாவல்­களை எடுத்­துக்­கொண்­டால் ஒரு கதா­பாத்­தி­ரம் மூன்­றாம் பக்­கத்­தில் என்ன செய்­தது என்­பதை 11ஆம் பக்­கம் படிக்­கும்­போது நினை­வில் கொள்­வோம். இது வாச­க­ரின் நினை­வாற்­றலை ஈடு­ப­டுத்­தும் நட­வடிக்கை என்­பதை டாக்­டர் ரெஸ்­டேக் சுட்­டி­னார்.

தொழில்­நுட்­பம்... எச்சரிக்கை!

எல்­லாத் தக­வல்­க­ளை­யும் கைத்­தொ­லை­பே­சி­யில் சேமித்து வைக்­கும் பழக்­கத்­தால் நம் மூளை­யின் செயல்­தி­றன் மங்­கு­கிறது என்று எச்­ச­ரிக்­கி­றார் டாக்­டர் ரெஸ்­டேக்.

அடுத்த பிரச்­சினை, கையி­ல் இ­ருக்­கும் வேலை­யில் இருந்து உங்­கள் கவ­னத்­தைத் திசைதிருப்­பும் அம்­சங்­கள் கைத்­தொ­லை­பே­சி­யில் அதி­கம். நண்­ப­ரு­டன் பேசிக்­கொண்டே வீதி­யில் நடந்து செல்­வது, மின்­னஞ்­சல் படிக்­கும்­போதே 'நெட்­ஃபி­ளிக்­சில்' படம் பார்ப்­பது இப்­படி அடுக்­கிக்­கொண்டே போக­லாம்.

இவை அனைத்­தும் ஒரு நிகழ்­வின் தரு­ணத்­தில் கவ­ன­மின்­றிச் செயல்­ப­டத் தூண்­டு­பவை. நினை­வாற்­ற­லுக்கு மிக­வும் முக்­கி­ய­மான கவ­னத்தை இவை சிதைக்­கின்­றன.

மன­நிலை

உங்­க­ளது மன­நி­லைக்­கும் மற­திக்­கும் தொடர்­புண்டு.

சான்றாக, மன உளைச்­ச­லால் பாதிக்­கப்­பட்ட ஒரு­வ­ருக்கு நிறைய மறதி ஏற்­ப­டக்­கூ­டும். அதி­கம் உணர்ச்­சி­வ­சப்­ப­டு­வோ­ருக்­கும் இந்­தச் சிக்­கல் ஏற்­ப­டக்­கூ­டும்.

எல்­லா­வற்­றுக்­கும் கவ­லைப்­பட வேண்­டாம்.

சில வகை மற­தி­கள் பொது­வாக எல்­லா­ருக்­கும் ஏற்­ப­டக்­கூ­டி­ய­வையே. கூட்ட நெரி­ச­லான இடத்­தில் வாக­னத்தை எங்கு நிறுத்­தி­னோம் என்று திண­று­வது நம்­மில் பல­ருக்­கும் அவ்­வப்­போது நிகழ்­வதே. வெளி­யூர்ப் பய­ணத்­தில் ஹோட்­டல் அறை எண்ணை மறப்­ப­தும் இப்­ப­டித்­தான். ஆனால் உங்­கள் வீட்டு முக­வ­ரியை மறந்­து­விட்­டீர்­கள் என்­பது சற்­றுக் கவ­லைக்­கு­ரிய அம்­சம். மருத்­துவ உத­வியை நாடு­வது நல்­லது என்று இந்த நூலில் டாக்­டர் ரெஸ்­டேக் ஆலோ­சனை கூறி­யுள்­ளார்.