தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சுகாதாரப் பராமரிப்புத் துறையின் உதவிக்கரங்கள்

2 mins read
2ac0eeca-ff56-47d0-a16f-784bf7cd404f
8 வயதாக இருந்தபோது தம் இடது காலை விபத்தில் இழந்த திருவாட்டி சரிதா, 39, தொண்டூழியராகத் தம்மைப் போன்றோருக்கு ஆதரவு வழங்கி வருகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தமது இடது காலை எட்டு வய­தி­லேயே விபத்து ஒன்­றில் இழந்­தார் திரு­வாட்டி சரிதா விஸ்­வ­நா­தன், 39. இவர் டான் டோக் செங் மருத்­து­வ­ம­னை­யின் ஆத­ர­வுக் குழுத் தொண்­டூ­ழி­ய­ராக, செயற்கை கை/கால் பொருத்­தப்­பட்­டோ­ருக்­கும் சக்­கர நாற்­கா­லி­யில் நட­மாடு­வோ­ருக்­கும் ஆறு­த­லும் நம்­பிக்­கை­யும் அளிக்­கும் தூணாக உள்­ளார்.

விபத்­தில் இடுப்­பி­லி­ருந்து இடது காலை திரு­வாட்டி சரிதா இழந்­து­விட்­டார். தனக்கு நேர்ந்­தது மற்­ற­வ­ருக்­கும் நேர்ந்­துள்­ளதை அறி­யும்­போது பலம் தரும் ஆத­ர­வாக அது இருக்­கும் என்­பதை அவர் நன்கு அறிந்­த­வர். இவ­ரைப் போலவே சிங்­கப்­பூ­ரில் நூற்­றுக்­க­ணக்­கா­னோர் தங்­க­ளின் நேரத்தை மருத்­து­வ­ம­னை­க­ளி­லும் பரா­ம­ரிப்பு நிலை­யங்­க­ளி­லும் தொண்­டூ­ழி­யத்­திற்­காக செல­வழிக்­கின்­ற­னர்.

பாதிக்­கப்­பட்ட நோயா­ளி­க­ளு­டன் கலந்­து­ற­வா­டு­வ­தி­லும் மருத்­து­வச் சந்­திப்­பு­க­ளின் வெவ்­வேறு கால­கட்­டங்­களில் உத­வு­வ­தி­லும் இந்­தத் தொண்­டூ­ழி­யர்­கள் கவ­னம் செலுத்தி வரு­கின்­ற­னர்.

திரு­வாட்டி சரி­தா­வைப் போன்ற தொண்­டூ­ழி­யர்­க­ளுக்கு நோய் அல்­லது மருத்­து­வப் பிரச்­சினை ஏற்­பட்ட அனு­ப­வம் உண்டு.

அத­னால் மருத்­து­வர்­களும் சிகிச்­சை­யாளர்­களும் பதி­ல­ளிக்க முடி­யாத ஒரு சில கேள்­வி­க­ளுக்­குக்­கூட இவர்­க­ளால் பதி­லளிக்க முடி­யும். உதா­ர­ணத்­திற்கு செயற்­கைக் கால் பொருத்­தப்­பட்டு அத­னால் தோலில் ஏற்­ப­டக்­கூ­டிய சிறு காயங்­க­ளுக்­கும் தடிப்­பு­க­ளுக்­கும் என்ன செய்­வது என்­ப­தற்கு அதை அனு­ப­வித்த ஒரு­வ­ரா­லேயே சிறப்­பாக விளக்க முடி­யும்.

நோயா­ளி­க­ளுக்­கும் பரா­ம­ரிப்­பா­ளர்­க­ளுக்­கும் எளிய வேலை­க­ளைச் செய்­வ­தற்­குக் கவ­லை­யும் நோயும் ஒரு தடை­யாக இருக்­க­லாம்.

அந்­நி­லை­யில் மருத்­து­வ­ம­னை­யில் முன்­பதிவு செய்­தல், நோயா­ளி­க­ளுக்கு வழி­காட்டு­தல் போன்ற சூழ்­நி­லை­களில் உத­வும் தொண்­டூ­ழி­யர்­களும் உண்டு.

நோயா­ளி­களை இன்­மு­கத்­து­டன் வர­வேற்­பது, மருந்­த­கத்­தில் தேவை­யான மருந்­து­களைத் தயார்­செய்­வது, தாதி­ய­ருக்கு ஆத­ர­வாக நோயா­ளி­க­ளுக்கு உணவு பரி­மா­று­வது, உணவை ஊட்­டு­வது போன்ற பல்­வேறு வகை­களில் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் துறை சார்ந்த தொண்­டூ­ழி­யர்­கள் உதவி வரு­கின்­றனர்.

தங்­கள் பணி­யைத் தொடங்­கு­வ­தற்கு முன்­பாக அவர்­க­ளுக்­குப் பயிற்­சி­யும் அளிக்­கப்­ப­டு­கிறது.

பயிற்­சி­பெற்ற சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு நிபு­ணர்­கள் ஆற்­றும் பணி­க­ளுக்கு உன்­னத ஆத­ரவை இந்­தத் தொண்­டூ­ழி­யர்­கள் நல்­கு­கின்­ற­னர். அத்­து­டன் விலை மதிக்க முடி­யாத சேவை­யை­யும் நோயா­ளி­க­ளுக்­காக செய்­கின்­ற­னர்.

திரு­வாட்டி சரிதா மும்­பை­யி­லி­ருந்து 2016ஆம் ஆண்­டில் இங்கு தம் கண­வர், மக­ளு­டன் வந்­தார். அவ­ரது தொண்­டூ­ழி­யப் பய­ணம் அப்­போ­து­மு­தல் ஆரம்­ப­மா­கி­விட்­ட­தா­கக் கூறி­னார்.

"ஒரு­வ­ருக்கு ஒப்­பற்ற பலத்தை ஓர் ஆத­ர­வுக் குழு­வால் தர முடி­யும். சுகா­தார ரீதி­யாக பாதிக்­கப்­ப­டும்­போது தங்­கள் வாழ்க்கை என்­ன­வா­கப் போகிறது என்று ஒரு சில­ருக்கு அதிர்ச்­சி­யும் கவ­லை­யும் ஏற்­ப­ட­லாம். குறிப்­பாக, ஊனம் என்­பது ஒரு­வரை முடக்­கு­வது அல்ல, அவ­ரின் வாழ்க்­கை­யின் ஒரு பகுதி மட்­டுமே என்­பதை உணர்த்த வேண்­டும்," என்று கூறு­கி­றார் திரு­வாட்டி சரிதா.