நீங்கள் வாங்கும் இறைச்சி எத்தனை காலம் தாக்குப்பிடிக்கும்?

நீங்கள் வாங்கும் இறைச்சி எத்தனை காலம் தாக்குப்பிடிக்கும்?

2 mins read

சிங்­கப்­பூ­ருக்கு கோழி ஏற்­று­ம­தியை மலே­சியா நிறுத்­தி­வைத்­ததை அடுத்து பய­னீட்­டா­ளர்­களும் கடைக்­கா­ரர்­களும் அதி­க­ள­வில் கோழி­களை வாங்­கிக் குவித்­த­னர். இருப்­பி­னும், புதி­தாக வெட்­டப்­படும் கோழி­யின் இறைச்சி, எத்­தனை காலம் கெடா­மல் இருக்­கும் என்ற கேள்வி பலர் மன­தில் எழத் தொடங்­கி­யது.

இப்­படி புதி­தாக வெட்­டப்­பட்­டதோ, குளி­ரூட்­டப்­பட்­டதோ, உறைய வைக்­கப்­பட்­டதோ, ஒவ்­வொன்­றை­யும் எத்­தனை நாள்­க­ளுக்கு, எவ்­வாறு நாம் வைத்­தி­ருக்க முடி­யும் என்­ப­தைப் பற்றி அறிந்­தி­டு­வோம்.

உருக வைக்­கப்­பட்ட உணவை

மீண்­டும் உறைய வைப்­பது...

உறைய வைக்­கப்­பட்ட இறைச்­சி­யை­யும் கட­லு­ண­வை­யும் வெளியே இட்டு அவை உரு­கிய பின்­னர், மீண்­டும் உறைய வைப்­பது கூடாது என்­கின்­றனர் நிபு­ணர்­கள். இவ்­வாறு செய்­யும்­போது உண­வின் சுவை பாதிக்­கப்­படு­வ­து­டன் பாக்­டீ­ரியா கிருமி வள­ர­வும் வாய்ப்­புள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இவ்­வாறு நுண்­ணு­யி­ரி­கள் வளர்­வ­தற்கு 5 முதல் 60 டிகிரி செல்­சி­யஸ் ஏற்­றது என்­பர்.

பழங்­க­ளை­யும் காய்­க­றி­க­ளை­யும் முறை­யாக வைப்­பது...

பழங்­களும் காய்­க­றி­களும் உடனே குளிர்­சா­த­னப் பெட்­டி­யில் வைக்­கப்­பட வேண்­டும். வாடா­மல் இருக்க அவற்­றின் மீது சூரிய கதிர்­களோ வெப்­பமோ நேர­டி­யா­கப் படு­வ­தும் தவிர்க்­கப்­ப­ட­வேண்­டும்.

பழுத்த பழங்­க­ளைக் காய்­க­றி­க­ளு­டன் சேர்த்து வைக்­கக்­கூ­டாது. ஏனெ­னில் அந்­தப் பழுத்த பழங்­க­ளி­லி­ருந்து வெளி­வ­ரும் ஒரு­வகை வாயு, பச்­சைக் காய்­க­றி­க­ளின் நிறத்தை மஞ்­ச­ளாக்­கி­வி­டும். கடை­யில் வாங்­கும் இறைச்­சியை உடனே குளிர்­சா­த­னப் பெட்­டி­யில் வைப்­ப­தால் பாக்­டீ­ரியா வளர்­வதைத் தடுக்­க­லாம். அத்­து­டன் ஒவ்­வொரு வகை உண­வை­யும் தனித்­தனி பெட்­டி­களில் இட்டு, அவற்றை மூடி வைத்­தால் உணவு மாசு­பாட்­டைத் தவிர்க்­க­லாம்.

கட­லு­ணவு வாங்­கிய பின்...

கட­லு­ணவை வாங்­கி­ய­வு­டன் வீட்­டுக்கு உடனே சென்று அவற்­றைச் சுத்­த­மான நெகி­ழிப் பைக­ளிலோ பெட்­டி­க­ளிலோ வைத்­து­விட்டு குளிர்­சா­த­னப் பெட்­டி­யின் உறைய வைக்­கும் பகு­தி­யில் இட­வேண்­டும்.

பாது­காப்­பான முறை­யில் உருக வைப்­பது...

இறைச்­சி­யை­யும் கட­லு­ண­வை­யும் பாது­காப்­பான முறை­யில் உருக வைக்க மூன்று வழி­கள் உண்டு என்று சிங்­கப்­பூர் உணவு அமைப்பு கூறு­கிறது.

தேவை­யான உண­வுப் பகு­தியை குளிர்­சா­த­னப் பெட்டி அல்­லது மைக்­ரோ­வேவ் அடுப்பு அல்­லது குழாய் தண்­ணீ­ரில் இட்டு உருக வைக்­க­லாம்.

இருப்­பி­னும் மைக்­ரோ­வேவ் அடுப்­பில் உணவை உருக வைத்த பிறகு உடனே அதைச் சமைத்­திட வேண்­டும். ஏனெ­னில் உண­வின் ஒரு­சில பகு­தி­களில் வெப்­பம் கார­ண­மாக நுண்­ணுயிரி­கள் வள­ரத் தொடங்­க­லாம்.