'பேசும் கலை வளர்ப்போம்'

'பேசும் கலை வளர்ப்போம்'

1 mins read
3d18465e-4433-4a4c-8331-eedd08391710
-

ஜாலான் புசார் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு மற்றும் இளம்பிறை இலக்கிய வட்டம் ஏற்பாட்டில் மாதந்தோறும் நடைபெற்று வரும் 'பேசும் கலை வளர்ப்போம்' நிகழ்ச்சி, கடந்த 16ஆம் தேதியன்று ஜாலான் புசார் சமூக மன்றத்தில் நேரடி நிகழ்வாக நடந்தேறியது.

சிங்கப்பூர் வாசகர் வட்ட தலைவர் திருமதி சித்ரா ரமேஷ் சிறப்புப் பேச்சாளராகக் கலந்துகொண்ட நிகழ்வில் மாணவர்கள் யாழினி சிவபிரகாஷ், குறிஞ்சி செல்வன் துவாரகா, பா.விஜ்வல்ராஜன், சிவ வேதாந்த், வியாச பிரகன், சனா கான் ஆகியோருக்கு இளம்பிறை இலக்கிய வட்டத்தலைவர் புதியநிலா மு. ஜஹாங்கீர் சான்றிதழ் வழங்கினார்.

இந்த மாதாந்தர நிகழ்ச்சியில் மாணவர்கள் பங்கேற்க, முனைவர் சையத் நிசார் 85034204 எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

செய்தி, படம்: ஏற்பாட்டுக் குழு