மனித உடலுக்குப் பொதுவாக அன்றாடம் 50 கிராமுக்குக் குறையாத அளவில் புரதச் சத்து தேவைப்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதை நமது வழக்கமான உணவில் இருந்தே பெறமுடியும். ஆனாலும் இன்றைய அவசர உலகில் இளையர்கள் பலரும் இதைத் தவிர்த்து புரதச் சத்து பானத்தைப் பருகுகின்றனர்.
பால், தயிர், பருப்பு, பயறு, காளான், மீன், முட்டை, இறைச்சி போன்றவற்றை உட்கொண்டால் போதும். இப்படி இயற்கையாக உற்பத்தியாகும் உணவை உண்ணும்போது, புரதச்சத்துடன் உடலுக்கு தேவையான நார்ச்சத்து, வைட்டமின், தாதுக்கள் போன்ற மற்ற சத்துகளும் கிடைத்துவிடும். இது உடல் ஆரோக்கியத்துக்கு இன்னும் வலு சேர்க்கும். ஆனால், 'புரோட்டின் ஷேக்' அருந்தும்போது, அதிலுள்ள புரதம் மட்டுமே உடலில் சேரும். மற்ற சத்துகள் சேர வழியில்லை. உடல் எடையைக் குறைக்க விரும்பும் சிலரும் உணவைத் தவிர்த்துவிட்டு இந்த பானங்களைப் பருகுகின்றனர்.
சத்துபானம் தானே என்று அதிகமாக உட்கொண்டால், சிறுநீரகத்தில் கல் உருவாகும் என்கின்றனர் மருத்துவர்கள். ரத்தத்தில் கொழுப்பு அதிகரித்து, இதய நோய் ஏற்படும்; கல்லீரல் நோய்க்கு அடிபோடும் என்று எச்சரிக்கின்றனர்.
படம்: இணையம்

