கவிமாலையில் அம்பை ஆ. பாலசரஸ்வதியின் சிறப்புரை

கவிமாலையில் அம்பை ஆ. பாலசரஸ்வதியின் சிறப்புரை

1 mins read

சிங்­கப்­பூ­ரில் உள்ள கவி­ஞர்­கள், கவிதை ஆர்­வ­லர்­க­ள் பங்குபெறும் மாதாந்தரச் சந்திப்பை ஒவ்வொரு மாதத்தின் கடைசி சனிக்கிழமையில் நடத்திவருகிறது கவி­மாலை அமைப்பு.

கவி­மா­லை­யின் 266வது சந்­திப்பு 30.07.2022 சனிக்­கி­ழமை மாலை ஆறு மணிக்கு தேசிய நூல­கத்தின் 'பாசி­பி­ளிட்டி' அறை­யில் நடை­பெ­ற­வி­ருக்­கிறது. இம்­மா­தச் சந்­திப்­பில் தமிழ்­செம்­மல் அம்பை ஆ.பால­ச­ரஸ்­வ­தி­யின் சிறப்­பு­ரை­யு­டன் 'புறப்­பா­டல்­களில் இசைக்­க­ரு­வி­கள்' என்ற தலைப்­பில் சித்ரா தணி­கை­வே­ல­னின் சிற்­று­ரை­யும், 'என்­னைக் கவர்ந்த மர­புப் பாடல்­கள்' என்ற தலைப்­பில் இராம். நாச்­சி­யப்­ப­னின் பகிர்­வும் இடம்­பெ­ற­வி­ருக்­கின்­றன. 'விடி­யாத இர­வென்று எது­வு­மில்லை' எனும் தலைப்­பி­லான இம்­மா­தப் போட்­டிக் கவி­தை­க­ளின் விமர்­ச­ன­மும் இடம்­பெ­றும். நிகழ்ச்­சிக்கு அனு­மதி இல­வ­சம்.