வாழுமிடத்தைத் தூய்மை ஆக்குவோம்

வாழுமிடத்தைத் தூய்மை ஆக்குவோம்

1 mins read

விஞ்­ஞா­னி­யும் இந்­தி­யா­வின் மறைந்த முன்­னாள் அதி­ப­ரு­மான டாக்­டர் அப்­துல் கலா­மின் 7வது நினை­வு­நாளை முன்­னிட்டு, அப்­துல் கலாம் விஷன் சொஸைட்டி, தேக்கா பகு­தி­யில் குப்பை அகற்­றும் பணியை மேற்­கொள்ள ஏற்­பாடு செய்­தி­ருக்­கிறது.

வாழு­மி­டத்­தைத் தூய்­மை­யாக்­கு­வோம் எனும் இந்த நிகழ்ச்சி, தேசிய சுற்­றுப்­புற வாரியத்தின் ஆத­ர­வு­டன் நாளை, ஞாயிற்­றுக்­கிழமை காலை 10.30 மணி முதல் பிற்­ப­கல் 12.30 மணி வரை நடை­பெ­றும்.

'லிஷா' எனப்­படும் லிட்­டில் இந்­தியா கடைக்­கா­ரர்­கள் மர­பு­டை­மைச் சங்­கத்­தின் தலை­வர் சங்­க­ர­நா­தன் நிகழ்ச்­சி­யைத் தொடங்­கி­வைப்­பார்.

கேம்­பல் லேனில் தொடங்கி, லிட்­டில் இந்­தியா ஈரச்­சந்தை, அதை­யொட்­டிய பகு­தி­களில் குப்­பை­களை அகற்­றும் பணி மேற்­கொள்­ளப்­படும்.

தொண்­டூ­ழி­யர்­கள் இந்த நிகழ்ச்­சி­யில் பங்­கு­பெற்று ஆத­ரவு தரும்­படி ஏற்­பாட்­டுக் குழு­வி­னர் கேட்­டுக்­கொண்­டுள்­ள­னர்.