சிங்கப்பூர் சிற்பங்கள் இலவசக் கண்காட்சி

சிங்கப்பூர் சிற்பங்கள் இலவசக் கண்காட்சி

2 mins read
4eb483d4-9406-43a9-863b-67268169589f
கோவில் கோபுரத்தை நினைவுபடுத்தும் வகையில் மூன்றடுக்குகளில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் இந்து தெய்வச் சிலைகள் (இடது படம்), ராஃபிள்ஸ் சிற்பத்தின் உடற்பகுதியைச் சித்திரிக்கும் பொம்மைகள் (வலது மேல் படம்), காலனித்துவ ஆட்சியின்கீழ் சிங்கப்பூரில் இடம்பெற்ற வர்த்தகத்தைச் சித்திரிக்கும் இத்தாலியச் சிற்பியின் கைவண்ணம். படங்கள்: தேசிய காட்சிக்கூடம் -
multi-img1 of 3

சிங்­கப்­பூர் சிற்­பங்­கள் என்­ற­வு­டன் நமக்கு நினை­வுக்கு வரு­வது மெர்­ல­யன் அல்­லது ஸ்டாம்ஃபர்ட் ராஃபிள்­சின் சிற்­பங்­கள்­தான்.

இவற்­றுக்கு அப்­பா­லும் பல்­வேறு கலை­யம்­சம் பொருந்­திய படைப்­பு­கள் உள்­ளூர் சிற்­பி­க­ளின் கைவண்­ணத்­தில் உரு­வா­கி­யுள்­ளன.

அவற்­றைப் பொது­மக்­க­ளின் பார்­வைக்­குக் கொண்­டு­வ­ரும் நோக்­கில் தேசிய காட்சிக்கூடம் 30 ஆண்­டில் முதன்­மு­றை­யாக ஒரு கண்­காட்­சிக்கு ஏற்­பாடு செய்­துள்­ளது.

'நத்­திங் இஸ் ஃபாரெவர்-ரீதிங்­கிங் ஸ்கல்ப்­சர் இன் சிங்­கப்­பூர்' எனும் தலைப்­பி­லான கண்­காட்சி நேற்று தொடங்­கி­வைக்­கப்­பட்­டது.

இதில் 70க்கும் மேற்­பட்ட சிற்­பங்­கள் காட்­சிக்கு வைக்­கப்­பட்­டுள்­ளன. இவற்­றில் சில 19ஆம் நூற்­றாண்­டைச் சேர்ந்­தவை.

சிங்­கப்­பூர் சிற்­பக்­க­லை­யின் தாத்தா என்­ற­ழைக்­கப்­படும் இங் எங் டெங், புகழ்­பெற்ற சிற்­பி­க­ளான டாங் டா வூ, லீ வென் போன்­றோ­ரின் சிற்­பங்­களும் இங்கு உள்ளன.

மெர்­ல­யன் சிற்­பமோ சர் ஸ்டாம்­ஃபர்டு ராஃபிள்­சின் சிற்­பமோ இதில் இல்லை; ஆனா­லும் அவற்­றைச் சித்­தி­ரிக்­கும் கலைப்­ப­டைப்­பு­கள் இடம்­பெற்­றுள்­ளன.

கலை­ஞர் ஜிம்மி ஓங்­கின் 'சீம்ஸ்ட்­ரெஸ் ராஃபிள்ஸ் எஃபிஜிஸ்' எனும் தலைப்­பி­லான சிற்ப மாதி­ரி­கள், கண்­காட்­சி­யின் நுழை­வா­யிலை அலங்­க­ரிக்­கின்­றன.

ராஃபிள்ஸ் சிலை­யின் உடல்­பகு­தி­யைச் சித்­தி­ரிக்­கும் வகை­யில் பஞ்சு அல்­லது செயற்கை நூலிழை கொண்டு தயா­ரிக்­கப்­பட்ட பொம்­மை­கள் இவை.

அதி­கா­ரம், ஆன்மீ­கம், உடல்­சார்ந்த பொருள்­கள், உரு­வாக்­கம்-அழித்­தல்-மறு உரு­வாக்­கம் ஆகிய நான்கு கருப்­பொ­ருள்­களில் இங்கு சிற்­பங்­கள் காட்­சிக்கு வைக்­கப்­பட்டுள்­ளன.

டோபி காட் எம்ஆர்டி நிலை­யத்­துக்கு வழி­விட்டு ஆர்ச்­சர்ட் ரோட்­டில் இருந்து சிராங்­கூன் சாலைக்கு இடம்­பெ­யர்ந்த ஸ்ரீ சிவன் கோயி­லில் இருந்த தெய்­வச் சிலை­களை இங்கு காண­மு­டி­யும்.

புக்­கிட் பிரவுன் கல்­லறை வளா­கத்­தில் இருந்து சேக­ரிக்­கப்­பட்ட கலைப்­படைப்­பு­களும் இதில் இடம்­பெற்­றுள்­ளன.

கலை­ஞர் ஆங் சோங் நியான் பல்­வேறு பொருள்­களில் தயா­ரிக்­கப்­பட்ட மெர்­ல­யன் சிலை­க­ளைச் சேக­ரித்­துள்­ளார்.

இவற்­றைப் பழைய பொருள்­களை விற்­பனை செய்­யும் கடை­க­ளி­லும் இணை­யத்­த­ளங்­கள் மூல­மா­க­வும் வாங்­கி­ய­தா­கக் கூறும் இவர், சுங்கை ரோட்­டில் முன்­னர் செயல்­பட்ட 'திரு­டர் சந்­தை­யி­லும்' சில­வற்றை வாங்­கி­ய­தா­கச் சொல்­கி­றார்.

சிங்­கப்­பூ­ரில் 1921 முதல் 1956 வரை வேலை­பார்த்த இத்­தா­லி­யச் சிற்பி ரொடோல்ஃபோ நோலி­யின் சிற்­பங்­க­ளை­யும் கண்­காட்­சிக்­குச் செல்­வோர் காண­லாம்.

சிற்பி இங் எங் டெங்­கின் சம­கா­லப் படைப்­பு­களும் இதில் காட்­சிக்கு வைக்­கப்­பட்­டுள்­ளன.

1, செயிண்ட் ஆண்ட்ருஸ் ரோட்­டில் உள்ள சிங்­கப்­பூர் தேசிய காட்சிக்கூடத்­தில், அடுத்த ஆண்டு பிப்­ர­வரி ஐந்­தாம் தேதி வரை இந்­தக் கண்­காட்சி நடை­பெ­றும்.

நாள்தோறும் காலை 10 மணி முதல் இரவு ஏழு மணி வரை செயல்படும் இந்தக் கண்காட்சியைக் கண்டு மகிழ அனுமதி இலவசம்.