தேவையான பொருள்கள்:
வாழைப்பழம் ஐந்து
பால் ஒரு லிட்டர்
ஏலக்காய்ப் பொடி சிறிதளவு
முந்திரி, பாதாம் கையளவு
தேன் கால் கப்
செய்முறை:
வாழைப்பழங்களைத் தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தேன் சேர்த்து இந்தத் துண்டுகளை 'மிக்சியில்' நன்கு மசிக்கவும். பாலை கனமான பாத்திரத்தில் ஊற்றி அடிப்பிடிக்காமல் அவ்வப்போது கிளறிவிட்டுக் காய்ச்சவும்.
ஒரு லிட்டர் பால் பாதியளவு சுண்டிய பிறகு மசித்த வாழைப்பழ, தேன் கலவையை இதில் சேர்த்துக் கொள்ளவும்.
பாலும் பழக்கலவையும் சேர்ந்து இறுகிய நிலையில் அடுப்பில் இருந்து இறக்கி, ஆறிய பின் வேறொரு பாத்திரத்துக்கு மாற்றி குளிர்பதனப் பெட்டியின் உறைநிலைப் பகுதியில் வைக்கவும்.
ஐந்து மணி நேரத்துக்குப் பிறகு வறுத்துப் பொடித்த முந்திரி, பாதாம் சேர்த்து வாழைப்பழ ஐஸ்கிரீமைச் சுவைக்கலாம்.

