செல்சியின் வடிவில் ஸ்பர்சுக்கு காத்திருக்கும் கடும் சவால்

செல்சியின் வடிவில் ஸ்பர்சுக்கு காத்திருக்கும் கடும் சவால்

2 mins read
a835a2b7-987a-4d1e-9641-7567fb5616f1
ஸ்பர்ஸ் குழுவும் செல்சியும் அவற்றின் முதல் ஆட்டத்தில் வெற்றியைப் பதிவு செய்தன.அடுத்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று, வெற்றியின் பாதையில் தொடர இரு குழுக்களும் முனைப்புடன் உள்ளன. படங்கள்: இபிஏ -
multi-img1 of 2

லண்­டன்: இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் காற்­பந்­துப் போட்டி தொடங்­கு­

வ­தற்கு முன்பு நட்­பு­முறை ஆட்­டங்­களில் அசத்­திய ஸ்பர்ஸ் குழு, புதிய பரு­வத்­தின் முதல் வார­

இறு­தி­யி­லேயே லீக் பட்­டி­ய­லில் முதல் இடத்­துக்கு முன்­னே­றும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.

ஆனால் அதற்கு முன்பு, நாளை நடை­பெ­றும் ஆட்­டத்­தில் செல்­சியை அது வீழ்த்த வேண்­டும்.

வலி­மை­மிக்க செல்­சி­யைத் தோற்­க­டித்து லீக் பட்­டம் வெல்­லும் தரம் தனக்கு இருப்­பதை ஸ்பர்ஸ் நிரூ­பிக்க வேண்­டும் என அதன் ரசி­கர்­கள் விரும்­பு­கின்­ற­னர்.

புதி­தா­கக் கள­மி­றங்க இருக்­கும் ஆறு ஆட்­டக்­கா­ரர்­கள் குழு­வுக்கு வலு­சேர்க்க, செல்­சிக்கு எதி­ரான வியூ­கங்­களை ஸ்பர்ஸ் குழு­வின் நிர்­வாகி அண்­டோ­னியோ கோண்ட்டே வகுத்து வரு­கி­றார்.

ஆனால் இந்­தப் புதிய ஆட்­டக்­கா­ரர்­கள் அனை­வ­ரும் ஸ்பர்­சின் முதல் ஆட்­டத்­தில் விளை­யா­ட­வில்லை. இம்­மா­தம் 6ஆம் தேதி­இப்­ப­ரு­வத்­துக்­கான தனது முதல் ஆட்­டத்­தில் ஸ்பர்ஸ் குழு சவுத்­ஹேம்­ட­னைச் சந்­தித்­தது.

அதில் மிக­வும் சிறப்­பாக விளை­யாடிய ஸ்பர்ஸ், 4-1 எனும் கோல் கணக்­கில் வாகை சூடி­யது.

எனவே, ஸ்பர்­ஸில் இணைந்

திருக்­கும் புதிய ஆட்­டக்­கா­ரர்­கள் குழு­வுக்கு வலு­சேர்ப்­பது ஒரு­பு­றம் இருக்க, ஏற்­கெ­னவே கள­மி­றங்­கிய ஆட்­டக்­கா­ரர்­களும் வெற்றி

களைக் குவிக்­கக்­கூ­டி­ய­வர்­கள் என்று தெரி­ய­வந்­துள்­ளது.

கடந்த 32 ஆண்­டு­களில் ஒரே ஒரு­முறை மட்­டுமே ஸ்டாண்­ஃபர்ட் பிரிட்ஜ் விளை­யாட்­ட­ரங்­கத்­தில் செல்­சியை லீக் ஆட்­டத்­தில் ஸ்பர்ஸ் தோற்­க­டித்­துள்­ளது.

நாளைய ஆட்­டத்­தில் செல்­சியை ஸ்பர்ஸ் வீழ்த்­தி­னால் மான்­செஸ்­டர் சிட்­டிக்­கும் லிவர்­பூ­லுக்­கும் அது அச்­சு­றுத்­த­லாக அமை­யும்.

இதற்­கி­டையே, செல்­சி­யும் அதன் முதல் ஆட்­டத்­தில் வெற்­றி­யைப் பதிவு செய்­தது.

எவர்ட்­ட­னுக்கு எதி­ரான ஆட்­டத்­தில் அது 1-0 எனும் கோல் கணக்­கில் வெற்றி பெற்­றது.

ஸ்பர்ஸ் குழு­வைப் போல கோல் மழை பொழி­ய­வில்லை என்ற

போதி­லும் கிடைத்த பெனால்டி வாய்ப்­பைப் பயன்­ப­டுத்தி மூன்று புள்­ளி­களை செல்சி பெற்­றது.

எவர்ட்­ட­னுக்கு எதி­ராக விளை­யா­டி­யது போல் ஸ்பர்­சுக்கு

எதி­ரா­கச் செயல்­ப­டு­வது ஆபத்­

தா­னது என்று செல்­சி­யின் நிர்­வாகி தாமஸ் டுக்­கல் எச்­ச­ரிக்கை விடுத்­தார். ஆனால் நாள்­கள் செல்­லச் செல்ல தமது குழு­வின் தரம்

உய­ரும் என்று அவர் நம்­பிக்கை தெரி­வித்­தார்.

"கடந்த ஐந்து ஆண்­டு­களில் செல்­சி­யின் செயல்­பாட்­டைக் கூர்ந்து கவ­னித்­தால், நான்கு

அல்­லது ஐந்து இறு­திச் சுற்­று­

க­ளுக்கு அது தகுதி பெற்­றது.

"செல்சி போட்­டித்­தன்மை மிக்க குழு. நாள்­கள் செல்­லச் செல்ல அது மேலும் வலு­வ­டை­யும்," என்று மான்­செஸ்­டர் சிட்­டி­யி­லி­ருந்து விலகி செல்­சி­யில் இணைந்­தி­ருக்­கும் ரஹீம் ஸ்டெர்­லிங் தெரி­வித்­தார்.