டோஹா: உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியின் அட்டவணையில் மாற்றும் செய்யப்பட்டுள்ளது. வரும் நவம்பர் மாதம் 21ஆம் தேதி தொடங்க இருந்த போட்டி, ஒருநாள் முன்னதாக தொடங்கும் என்று உலகக் காற்பந்துச் சம்மேளனம் அறிவித்துள்ளது.
போட்டியை ஏற்று நடத்தும் கத்தார் களமிறங்கும் ஆட்டம் போட்டியின் முதல் ஆட்டமாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
எனவே, நவம்பர் 20ஆம் தேதியன்று கத்தாருக்கும் எக்வடோருக்கும் இடையிலான ஆட்டம் போட்டியின் முதல் ஆட்டமாக இருக்கும்.

