மிஞ்சிய உணவுகளைக் குறைந்த விலையில் வாங்க உதவும் செயலி

மிஞ்சிய உணவுகளைக் குறைந்த விலையில் வாங்க உதவும் செயலி

2 mins read

சிங்­கப்­பூ­ரின் நட்­சத்­திர உண­வ­கங்­களில் உண­வ­ருந்­தும் பல­ரின் கனவு இனி மிக­வும் குறைந்த விலை­யில் நிறை­வேற்றப் போகிறது 'ட்ரீட்­‌சூர்' எனும் செயலி.

நட்­சத்­திர உண­வ­கங்­களில் மிஞ்­சிய உண­வு­ வீணா­வ­தைத் தடுக்­க­வும் அதே­சமயம் பய­னர்­க­ளுக்­குக் குறைந்த விலை­யில் கிடைக்­க­வும் வழி செய்­கிறது இந்­தச் செயலி.

நிலை­யான தீர்வு என்­பது அனை­வ­ருக்­கும் கிடைக்­கக்­கூ­டி­ய­தாக இருக்­க­வேண்­டும் என்­கி­றார் 'ட்ரீட்­‌சூர்' செய­லி­யின் தலைமை நிர்­வாக அதி­கா­ரி­யும் இணை நிறு­வ­ன­ரு­மான பிர்ஸ்­டன் வோங்.

சிங்­கப்­பூ­ரின் எக்­கோர் குழு மற்­றும் ஹயட் உண­வ­கங்­கள், சிங்­கப்­பூர் மாரி­யட் டேங் பிளாசா போன்ற நிறு­வ­னங்­கள் இந்த செய­லி­யைப் பயன்­ப­டுத்­தத் தொடங்­கி­

உள்­ளன.

2017ல் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட 'ட்ரீட்­‌சூர்' செயலி, கிட்­டத்­தட்ட 30,000க்கும் மேற்­பட்ட பய­னர்­க­ளைக் கொண்­டுள்­ளது.

இச்­செ­ய­லி­யின் மூலம் கிட்­டத்­தட்ட

30 டன் உணவு வீணா­கா­மல் தடுக்­கப்­பட்டு உள்­ளது.

இருப்­பி­னும், சிங்­கப்­பூ­ரில் சென்ற ஆண்டு குவிந்த 817,000 டன் உண­வுக் கழி­வு­களை ஒப்­பி­டும்­போது இந்த அளவு மிக­வும் குறை­வா­ன­தா­கும்.

உல­க­ம் முழுவதும் கிட்­டத்­தட்ட மூன்­றில் ஒரு பங்கு உணவு வீணா­கிறது. இதில், பாதிக்­கும் மேற்­பட்­டவை ஆசிய-பசி­பிக் நாடு­களில் வீண­டிக்­கப்­ப­டு­கின்­றன.

உல­க­ள­வில் குவி­யும் உண­வுக்­க­ழி­வு­களின் மூலம், எட்டு முதல் 10 விழுக்­காடு மீத்­தேன் போன்ற சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் வாயு வெளி­யே­று­வ­தாக ஐநா கூறு­கிறது.

எனவே, உலக நாடு­கள் பல­வும் உண­வுக் கழி­வு­க­ளைக் குறைப்­ப­தற்­கான நட­வடிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றன.

மிஞ்­சிய உண­வை மக்­க­ளுக்­குக் கொண்டு செல்­லும் இது­போன்ற செயலி ஹாங்காங்கில், சென்ற ஆண்டு அறி­முகப்­படுத்­தப்­பட்­டது. இதன்­மூ­லம் கிட்­டத்­தட்ட 25,000 கிலோ உண­வுக்கழிவு தடுக்­கப்­பட்டது.

பேரங்­கா­டி­களில் விற்­கப்­ப­டாத உணவை தூக்கி வீசு­வ­தற்கு பிரான்ஸ் தடை­வி­தித்து உள்­ளது. ஸ்பெ­யி­னில், உண­வுக் கழி­வு­களைக் குறைக்­கும் நோக்­கில் நிறு­வ­னங்­களுக்கு அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டுள்­ளது.