சப்வே உணவகத்தின் சிங்கப்பூர் காட்சியகம்

சப்வே உணவகத்தின் சிங்கப்பூர் காட்சியகம்

1 mins read
062d3051-b795-400b-9fba-cd5bbb300ed7
11 பிரின்செப் லிங்கில் அமைந்துள்ளது காட்சியகம். மின்னிலக்கக் காட்சிகள், உணர்கருவிகள், சான்ட்விச் உணவைத் தயாரிக்கும் விளையாட்டுகள் போன்றவை காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளன. படம்: சப்வே ரெஸ்டாரன்ட்ஸ் சிங்கப்பூர் -

உல­கப் புகழ்­பெற்ற சப்வே உண­வ­கம் சிங்­கப்­பூ­ரில் இந்த மாதம் மட்­டும் காட்­சி­ய­கத்தை அமைத்­தி­ருக்­கிறது.

சான்ட்­விச் உணவை அடிப் ­ப­டை­யா­கக் கொண்ட சிங்­கப்­ பூரின் முதல் காட்­சி­ய­கம் இது என்று சப்வே கூறி­யுள்­ளது.

11, பிரின்­செப் லிங்­கில் அமைக்­கப்­பட்­டுள்ள இந்தக் காட்­சி­ய­கம், ஆகஸ்ட் 10ஆம் தேதி தொடங்­கப்­பட்­டது. வரும் 30ஆம் தேதி வரை அது திறந்­தி­ருக்­கும்.

மின்­னி­லக்­கக் காட்­சி­கள், உணர்­க­ரு­வி­கள், சான்ட்­விச் உணவைத் தாங்­களே செய்­வது கொள்­வது போன்ற உணர்­வைத் தரும் விளை­யாட்­டு­கள் ஆகியவை காட்­சி­ய­கத்­தில் இடம்­பெற்­றுள்­ளன.

காட்­சி­ய­கத்­துக்­குச் செல்­ப­வர்­கள் தாங்­களே சான்ட்­விச் செய்து கொள்­ள­லாம். புதிர்ப்­போட்­டி­களும் உண்டு.

ஃபுட்பாண்டா பற்­றுச்­சீட்­டு­கள் உள்­ளிட்ட பரி­சு­களும் வழங்­கப் ­ப­டு­கின்­றன. சப்வே உண­வ­கத்­தின் சிறப்­புப் பொருள்­களும் விற்­ப­னைக்கு உள்­ளன.

சிங்­கப்­பூ­ரில் உள்ள சப்வே கிளைகளில் குறிப்­பிட்ட தொகை செலவு செய்­தால், பதிவு செய்துகொண்டு காட்­சி­ய­கத்­துக்குச் செல்லலாம்.

12 வய­துக்­கும் குறைந்த சிறு­வர்­க­ளுக்கு அனு­மதி இல­வ­சம்.

மேல்­வி­வ­ரத்­துக்கு: https://www.subwaymuseumsg.com/