கவிதை மணம் கமழ்ந்த சிங்கப்பூர் விழா

கவிதை ரசனை, ஆய்வு, படைப்பு ஆகியவற்றை முன்னிறுத்தி ஆண்டுதோறும் கொண்டாடப்படும் சிங்கப்பூர் கவிதை விழா இந்த ஆண்டு, ஜூலை 29ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற்றது. பொதுமக்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்துகொண்ட இந்தப் பன்மொழி தேசிய கவிதை விழாவில் தமிழ் மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்றனர்.

காயத்­திரி காந்தி

கவி­தை­க­ளைக், குறிப்­பாக உள்­ளூர் கவி­தை­களை ஏன் படிக்க வேண்­டும் என்ற சில­ரின் கேள்­விக்கு, அண்­மை­யில் இடம்­பெற்ற சிங்­கப்­பூர் கவிதை விழா­வில் பங்­கேற்ற இளை­யர்­க­ளின் ஆய்­வுப் படைப்­பு­கள் விடை­யாய் அமைந்­தன.

உள்­ளூர்க் கவி­தை­க­ளைப் படிக்­கும்­போது சிங்­கப்­பூர் பற்றி இது­வரை தெரி­யாத பல தக­வல்­களும் கிடைக்­காத பார்­வை­களும் புலப்­பட்­டதை தங்­கள் படைப்­பு­களில் விவ­ரித்­த­னர், 'நமக்­குள் கவிதை' என்­னும் இளை­யர் கவி­தை ஆய்­வ­ரங்­கில் பேசிய அந்த இளை­யர்­கள்.

'நமக்­குள் கவிதை' ஆய்­வ­ரங்கு சென்ற ஆகஸ்ட் 6ஆம் தேதி 'தி ஆர்ட்ஸ் ஹவு­சில்' நடை­பெற்­றது.

ஜூலை 29 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடை­பெற்ற நான்கு மொழி சிங்­கப்­பூர் கவிதை விழா­வின் ஓர் அங்­க­மாக இந்த ஆய்­வ­ரங்­கம் இடம்­பெற்­றது.

சிங்­கப்­பூர் கவிதை விழா அமைப்பு கடந்த 2015ஆம் ஆண்டு முதல் நடத்­தி­வ­ரும் கவிதை விழா­வில் பன்­மொழி நிகழ்ச்­சி­கள் இடம்­பெற்று வரு­கின்­றன.

கடந்த 5ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை தமிழ்­மொழி நிகழ்ச்­சி­களும் பள்ளி வரு­கை­களும் இடம்­பெற்­றன.

உள்­ளூர் நவீன தமிழ்க் கவிதை நூல்­களை விமர்­சிக்­கும் முயற்­சி­யில் ஈடு­பட்ட இளை­யர்­கள், தாங்­கள் தேர்ந்­தெ­டுத்த ஒரு நூலில் உள்ள கவி­தை­க­ளைப் பற்­றிய தங்­கள் ரச­னை­யை­யும் பார்­வை­யை­யும் முன்­வைத்­த­னர். அவர்­களில் பெரும்­பா­லா­ன­வர்­கள் மாண­வர்­கள்.

இந்­தி­யா­வைச் சேர்ந்த புகழ்­பெற்ற கவி­ஞர்­கள்­ பெருந்­தேவி ஸ்ரீநி­வாசன், கீதா சுகு­மா­ரன், இசை, சாம்­ராஜ் ஆகி­யோர் அவர்­க­ளுக்கு வழி­காட்­டி­னர்.

"இது எனக்கு சிறந்த கற்­றல் அனு­ப­வ­மாக இருந்­தது, இது போன்ற ஒரு தமிழ் நிகழ்­வில் நான் பங்­கேற்­பது இதுவே முதல் முறை. வாசிப்­பின் மூலம், கவி­தை­க­ளுக்­குள் மறைந்­தி­ருக்­கும் பொரு­ளைக் கண்­ட­றி­ய­வும் வெவ்­வேறு கண்­ணோட்­டங்­களில் இருந்து அவற்­றைப் புரிந்­து­கொள்­ள­வும் முடிந்­தது," என்­றார் தேசிய கல்­விக் கழக மாண­வி­யும் கருத்­த­ரங்­கில் கட்­டுரை படைத்­த­வ­ரு­மான ரோஷினி தியா­க­ரா­ஜன்.

பன்­மொ­ழித் தொகுப்­பு­க­ளான, "லவ் அண்ட் லைஃப் அட் தி கேலரி", "பிப்டி ஒன் பிப்டி" ஆகி­ய­வற்­றில் உள்ள கவி­தை­கள் பற்­றி­யும் படைப்­பா­ளர்­கள் ஆராய்ந்­த­னர்.

'லவ் அண்ட் லைஃப் அட் தி கேலரி' தொகுப்­பில் இடம்­பெற்ற போர் பற்­றிய இரண்டு கவி­தை­களை ஆய்வு செய்த ஜனனி ராமச்­சந்­தி­ரன், நம் வாழ்­நா­ளில் பார்க்­காத சம்­ப­வங்­கள் பற்றி இரண்­டாம் நிலைச் சான்­று­க­ளாக அக் கவி­தை­கள் விளங்­கு­வ­தைச் சுட்­டிக்­காட்­டி­னார்.

இளை­யர்­க­ளுக்கு வழி­காட்­டிய கவி­ஞர்­களில் ஒரு­வ­ரான சாம்­ராஜ், "இது­போன்ற கவிதை தொகுப்­பு­களை படிப்­ப­தால் மாண­வர்­க­ளின் கவிதை ரசனை கூடு­கிறது. அவர்­க­ளின் அறி­வுத்­தி­றன் விரி­வ­டை­வ­து­டன் இலக்­கி­யப் புரி­த­லும் பார்­வை­யும் மேம்­ப­டு­கிறது" என்று கூறி­னார்.

ஆய்­வ­ரங்­கில் பார்­வை­யா­ளர்­க­ளு­ட­னான கலந்­துரை­யா­ட­லும் இடம்­பெற்­றது. உல­கெங்­கி­லும் உள்ள தமிழ் இலக்­கி­யக் களம் பற்­றிய விரி­வான கருத்­துப் பரி­மாற்­றங்­களும் பய­னுள்ள விவா­தங்­களும் நடை­பெற்­றன.

"ஆரோக்­கி­ய­மான இலக்­கிய விமர்­சன மரபு நம் சமூ­கத்­திற்கு மிக முக்­கி­ய­மா­னது. தமிழ்ச் சமூ­கத்­தின் இளை­யர்­க­ளின் கவிதை ஆர்­வத்­தை­யும் கவித்­தி­ற­னை­யும் வளர்ப்­பதே இந்­நி­கழ்ச்­சி­யின் நோக்­கம்," என்று கூறி­னார் நிகழ்ச்சி ஒருங்­கி­ணைப்பாளர்­களில் ஒரு­வ­ரான ஆயி­லிஷா மந்­திரா.

ஆய்­வ­ரங்­கில் முன்­வைத்த கருத்­து­க­ளைக் கொண்டு, மூத்த கவி­ஞர்­க­ளின் வழி­ந­டத்­து­த­லோடு படைப்­பா­ளர்­கள் ஆய்­வுக் கட்­டு­ரை­களை எழு­து­வர். அவை தொகுக்­கப்­பட்டு நூலாக வெளி­யி­டப்­படும்.

சிங்­கப்­பூர் கவிதை விழா­வின் மற்­றொரு நிகழ்ச்­சி­யாக நவீன கவிதை பற்­றிய கலந்­து­ரை­யா­டல் இடம்­பெற்­றது.

ஆகஸ்ட் 7ஆம் தேதி தேசிய நூல­கத்­தில் நடந்த அந்­நி­கழ்ச்­சி­யில் கவி­ஞர்­கள் இசை, சாம்­ராஜ் ஆகி­யோ­ரு­டன் பங்­கேற்­பார்­களும் இணைந்து கவி­தை­கள் குறித்து உரை­யா­டி­னர்.

அண்­மைக்­கால நவீன தமிழ்க் கவி­தை­கள் சில­வற்றை வாசித்து அதன் மொழி, போக்­கு­கள், பேசு­பொ­ருள், நுணுக்­கங்­கள், அமைப்பு ஆகி­யவை பற்றி அதில் பங்­கேற்­பா­ளர்­கள் விவாதித்தனர்.

மாண­வர்­களும் பயன்­பெற்­ற­னர்

மாண­வர்­க­ளுக்கு கவிதை பற்றி விளக்­கும் பொருட்டு வெளி­நாட்­டுக் கவி­ஞர்­கள் இரு­வ­ரும் மேற்­கொண்ட பள்ளி வரு­கை­களும் சிங்­கப்­பூர் கவிதை விழாவை முன்­னிட்டு இடம்­பெற்­றன.

தேசிய கல்­விக் கழ­கத்­தில் தமிழ் பயிற்சி ஆசி­ரி­யர்­க­ளைச் சந்­தித்து உரை­யா­டி­ய­ கவி­ஞர் இசை, நவீன கவி­தை­க­ளைப் புரிந்­து­கொள்ள நிறைய கவி­தை­களை வாசித்­துப்­ ப­ழக வேண்­டும் என்று ஆலோசனை வழங்கினார்.

நவீன கவி­தை­களில் புதிய போக்கை ஏற்­ப­டுத்­தி­ய­வர்­களில் ஒரு­வ­ரா­கக் கரு­தப்­படும் அவர், எல்லா நவீன கவி­தை­க­ளை­யும் புரிந்­து­கொள்­வது அவ்­வ­ளவு சுல­ப­மில்லை என்­றார்.

வாச­கர்­க­ளு­டன் ஒரே அலை­ வ­ரி­சை­யில் ஒத்­துப்­போ­கும் கவி­தை­களை மட்­டுமே அவர்­களால் புரிந்து கொள்ள முடி­யும் என்­றும் இசை குறிப்­பிட்­டார்.

மேலும், என்­பி­எஸ் அனைத்­து­ல­கப் பள்ளி, யுவ­பா­ரதி அனைத்­து­ல­கப் பள்ளி ஆகி­ய­வற்­றில் கவி­தைப் பயி­ல­ரங்­கு­கள் நடத்­தப்­பட்­டன.

அவற்­றில் மாண­வர்­க­ளுக்கு ஏது­வான எளிய நடை­யில் கவி­தை­கள் பற்றி விளக்­கி­னார் கவி­ஞர் சாம்­ராஜ். அத்­து­டன் மாண­வர்­கள் கவிதை எழு­தப்­ப­ழக பயிற்சி பெற்­ற­னர்.

-கூடு­தல் செய்தி: மணி­கண்­டன் சுகுணா, தணி­கை­வேல் சித்ரா, சித்ரா ரமேஷ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!