பார்வைத்திறனைத் திருடும் கண் அழுத்த நோய்

பார்வைத்திறனைத் திருடும் கண் அழுத்த நோய்

4 mins read
501182df-be67-401c-a9e7-b46432c3ce85
வழக்கமான கண் பரிசோதனைக்குச் செல்வதன் மூலம் ஆரம்ப கட்டத்திலேயே பல்வேறு கண் பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றுக்கு உரிய சிகிச்சையைப் பெறலாம்.படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 3

சிங்கப்பூரில் பார்வைத்திறனை இழந்தோரில்

34 விழுக்காட்டினரிடம் கண் அழுத்த நோய் (குளுக்கோமா) இருந்துள்ளது. சிங்கப்பூர் தேசிய கண் நிலையத்தில் கண்புரை மற்றும் முழுமையான கண் மருத்துவத் துறையைச் சேர்ந்த டாக்டர் ரியுபென் ஃபூ, கண் அழுத்த நோய் ஏற்படுவதைத் தடுப்பதற்கான உத்திகளைப் பகிர்கிறார்.

ஆசி­யா­வில் பார்­வைத்­தி­றன் இழக்­கப்­ப­டு­வ­தற்­கான கார­ணங்­களில் கண்­புரை நோய்க்கு அடுத்­த­தாக கண் அழுத்த நோய் உள்­ளது.

கண்­ணில் பார்வை நரம்பு (ஆப்டிக் நர்வ்) சேத­ம­டை­வ­தால் கண்­ணுக்கு அழுத்­தம் அதி­க­ரிக்­கிறது.

ஆரம்ப நிலை­யில் எந்த அறி­கு­றி­யும் வெளிப்­ப­டுத்­தாத கண் அழுத்த நோய், 'அமை­தி­யாக பார்வைத்­தி­ற­னைத் திரு­டும் நோய்' எனக் கூறப்­படு­கிறது. இந்­நோய் தீவி­ர­ம­டைந்த பிறகே பார்­வைத்­தி­ற­னுக்­குப் பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளதை நோயா­ளி­கள் பலர் கவ­னிக்­கின்­ற­னர்.

எனி­னும், தொடக்­கத்­தி­லேயே கண்­ட­றிந்து இந்­நோ­யைக் கட்­டுக்­குள் வைத்­தி­ருந்­தால் பார்­வைத்­திறன் இழப்­பைத் தடுக்­க­லாம்.

"கண்­ணுக்­குள் அழுத்­தத்தை அள­விட்டு, கண்­ணுக்­குப் பின்­னால் உள்ள பார்வை நரம்பை முழு­மை­யாக மதிப்­பி­டு­வ­தன் மூலம் கண் அழுத்த நோய் கண்­ட­றி­யப்­ப­டு­கிறது. இந்நோயைக் குணப்­ப­டுத்த இய­லாது, ஆனால் பெரும்­பா­லான தரு­ணங்­களில் கண் சொட்டு மருந்து, 'லேசர்' சிகிச்சை அல்­லது அறுவை சிகிச்சை மூலம் இதைக் கட்­டுக்­குள் வைத்­தி­ருக்­க­லாம்," என்று டாக்­டர் ரியு­பென் ஃபூ கூறு­கி­றார்.

கண் அழுத்த நோயைத் தடுப்பது எப்படி?

1. வழக்­க­மான கண் பரி­சோ­த­னைக்­குச் செல்­லுங்கள்.

நாம் மூப்­ப­டை­யும்­போது நம் கண்­க­ளுக்­குப் பாதிப்பு ஏற்­படும் சாத்­தி­யம் அதி­க­ரிக்­கிறது. எனவே, பார்­வைத்­தி­ற­னில் ஏற்­படும் மாற்­றங்­க­ளுக்கு விழிப்­பு­டன் இருந்து, தொடக்­கத்­தி­லேயே கண் பிரச்­சி­னை­க­ளைக் கண்­ட­றி­வது முக்­கி­யம்.

அந்த வகை­யில் வழக்­க­மான, விரி­வான கண் பரி­சோ­த­னை­களுக்குச் செல்­வது அவ­சி­யம். உங்­கள் குடும்­பத்­தில் யாருக்­கா­வது கண் அழுத்த நோய் இருந்­தால்:

நீங்­கள் 35 வயதை எட்­டி­ய­தும் ஓரிரு ஆண்­டு­க­ளுக்கு ஒரு­முறை விரி­வான கண் பரி­சோ­த­னைக்­குச் செல்ல வேண்­டும்.

உங்­கள் குடும்­பத்­தில் எவ­ருக்கும் கண் அழுத்த நோய் இல்லை­யென்­றால்:

நீங்­கள் 40 வய­துக்­குக்­கீழ் உள்ள­வ­ராக இருந்­தால் மூன்று, நான்கு ஆண்­டு­க­ளுக்கு ஒரு­முறை விரி­வான கண் பரி­சோ­த­னைக்­குச் செல்ல வேண்­டும்.

நீங்­கள் 40 வய­துக்கு மேற்­பட்­ட­வ­ராக இருந்­தால் ஒன்­றரை, இரண்டு ஆண்­டு­க­ளுக்கு ஒரு­முறை நீங்­கள் விரி­வான கண் பரி­சோ­த­னைக்­குச் செல்ல வேண்­டும்.

"நீரி­ழிவு, உயர் ரத்த அழுத்­தம் போன்ற நாள்பட்ட பிரச்­சி­னை­கள் உடை­யோ­ருக்கு கண் அழுத்த நோய் ஏற்­படும் அபா­ய­மும் நில­வு­கிறது," என்று டாக்­டர் ஃபூ சொல்­கி­றார்.

2. நன்­றாகப் பார்க்க சத்தான உண­வ­ருந்துங்கள்.

உங்­கள் அன்­றாட உண­வில் பச்சை பசே­லான காய்­கறி, பழங்­களைச் சேர்த்­துக்­கொள்­ள­வும். உங்­கள் உட­லை­யும் கண்­க­ளை­யும் பாது­காக்­கும் வைட்­ட­மின்­களும் கனி­மங்­களும் அவற்­றி­ல் உள்­ளன. உண்­மை­யைச் சொல்­லப் போனால், கண் அழுத்த நோயைத் தடுப்­ப­தில் கேரட், மீன், 'சிட்­ரஸ்' பழங்­கள் ஆகி­யவை வைட்­ட­மின்­க­ளை­விட சிறந்­தவை என ஆய்­வு­கள் காட்டு­கின்­றன.

3. அடிக்­கடி உடற்­ப­யிற்சி செய்யுங்கள்.

வழக்­க­மான, மித­மான உடற்­பயிற்சி செய்­வ­தால் உங்­கள் ஒட்டு­மொத்த ஆரோக்­கி­யத்­துக்­கும் பயன் தரும். கண் அழுத்­தத்­தைக் குறைப்­ப­தன் மூலம் கண் அழுத்த நோய் ஏற்­ப­டு­வ­தைத் தடுக்­க­லாம். உடற்­ப­யிற்­சித் திட்­டத்­தைத் தொடங்­கு­வது குறித்து உங்­க­ளி­டம் ஏதே­னும் சந்­தே­கம் இருந்­தால் மருத்­து­வ­ரி­டம் சென்று ஆலோ­சனை பெற­வும்.

4. கண்­க­ளைப் பாது­காக்­கும் உப­க­ர­ணங்­களை அணி­யுங்கள்.

கண்­க­ளுக்­குக் கடு­மை­யான காயம் ஏற்­பட்­டால் கண் அழுத்­தம் உயர்ந்து, கண் அழுத்த நோய்க்கு வித்­தி­டக்­கூ­டும். அதிக அபாய விளை­யாட்­டு­கள் அல்­லது வேலை­யில் ஈடு­ப­டும்­போது கண் பாது­காப்பு உபக­ரணங்­களை அணி­ய­வும்.

கண் அழுத்த நோயைச் சமாளிப்பது எப்படி?

1. கண் சொட்டு மருந்­து­க­ளைச் செலுத்­துங்கள்.

கண் சொட்டு மருந்து கண் அழுத்­தத்­தைக் குறைத்து, பார்வை நரம்­புக்கு சேதம் ஏற்­ப­டு­வ­தைத் தடுக்­கும். கண் சொட்டு மருந்­தால் கண் அழுத்த நோயைக் குணப்­படுத்­தவோ பார்­வைத்­தி­றன் இழப்பைச் சரி­செய்­யவோ முடி­யாது. ஆனால், நோய் தீவி­ர­ம­டை­வதை அது தடுக்க உத­வும். எனவே, உங்­கள் கண் மருத்­து­வர் அறி­வு­றுத்­த­லின்­படி வேளைக்கு வேளை கண் சொட்டு மருந்­தைச் செலுத்­திக்­கொள்­ளுங்­கள்.

2. ஆரோக்கியமாக சாப்பிடுங்கள்

ஆரோக்­கி­ய­மாக சாப்­பி­டு­வ­தால் உங்­க­ளது சுகா­தா­ரத்­தைப் பேண உத­வும், ஆனால் கண் அழுத்த நோய் மோச­ம­டை­வ­தைத் தடுக்­காது. கண் ஆரோக்­கி­யத்­துக்கு முக்­கி­ய­மான வைட்­ட­மின் மற்­றும் ஊட்­டச்­சத்­து­களில் ஸிங்க், காப்­பர், செலி­னி­யம், வைட்­ட­மின் சி, ஈ, ஏ உள்­ளிட்­டவை அடங்­கும்.

'கெஃபின்' உட்­கொள்­வதை நீங்கள் குறைத்­துக்­கொள்ள வேண்டும். ஏனெ­னில், அள­வுக்கு அதி­க­மாக கெஃபின் உட்­கொள்­வதால் கண் அழுத்­தம் அதி­க­ரிக்­க­லாம்.

3. ஆரோக்­கி­ய­மான வாழ்க்­கை­மு­றை­யைக் கடைப்­பி­டிக்­க­வும்.

வாரத்­திற்கு சில முறை உடற்­பயிற்சி செய்­வது பலன் தரும். எனி­னும், நீங்­கள் உடற்­ப­யிற்சி செய்­யும் முறை குறித்து மருத்­து­வ­ரி­டம் ஆலோ­சனை பெற­வும். பளு தூக்குதல் போன்ற கடு­மை­யான உடற்­பயிற்­சி­க­ளைத் தவிர்த்­துக்­கொள்­ள­லாம்.

ஏனெ­னில் இத்­த­கைய உடற்­பயிற்­சி­கள் கண் அழுத்­தத்தை அதி­க­ரிக்­கக்­கூ­டும்.

4. உங்­க­ளைப் பரா­ம­ரிக்­கும் குழு­வு­டன் சேர்ந்து பணி­யாற்றுங்கள்.

கண் பரி­சோ­த­னை­க­ளுக்கு வழக்­க­மாக செல்­வ­தன் மூலம் உங்­க­ளைப் பரா­ம­ரிக்­கும் மருத்­துவக் குழு­வு­டன் தொடர்­பில் இருங்­கள். அப்­போ­து­தான் உங்­க­ளது ஆக அண்­மைய கண் அழுத்த நோய் நில­வ­ரம் பற்றி மருத்­து­வர் தெரிந்­து­கொள்ள முடி­யும்.

உங்­க­ளுக்கு வழங்­கப்­படும் சிகிச்சை முறையை நிர்­வ­கிக்­கும் சிறந்த நிலை­யில் மருத்­து­வக் குழு உள்ளது.