தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

களைகட்டவிருக்கும் சிங்கப்பூர் இரவு விழா

3 mins read
6df5044f-acc9-413d-92ef-4471ff7b4cc1
(இடமிருந்து வலம்:) சலுகைக் கட்டணத்தில் இரவுத் திருவிழா நடைபெறும் வட்டாரத்தில் உலாப் போக உதவும் மூன்று சக்கர வாகனம், ஃபோர்ட் கேனிங்கில் அமைக்கப்பட்டிருக்கும் முப்பரிமாண வடிவிலான காற்றடைத்த பறவைச் சிற்பம், ராஃபிள்ஸ் சிட்டிக்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கும் 'ஏன் ஓஷியன் வித்தவுட் த ஆங்கர்' சிற்பம். படங்கள்: எக்ஸ்ப்ளோர் எஸ்ஜி, ஸ்ட்ரெட்ய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 3

நாளை தொடங்­க­வி­ருக்­கிறது சிங்­கப்­பூர் இர­வு ­விழா.

மறு­பி­றப்பு எனப் பொருள்­படும் 'ரீபர்த்' என்­பது, ஈராண்­டுக்­குப் பிறகு நடை­பெ­றும் இவ்­வாண்­டு வி­ழா­வின் கருப்­பொ­ருள்.

இர­வு ­வி­ழாவை ஒட்டி, ஹேண்டி சாலை­யில் உள்ள கேத்தே பில்­டிங்­கின் முன்­பு­றம் உள்ள புல்­வெ­ளி­யில் ஆறு அறை­க­ளு­டன் கூடிய, திரைப்­ப­டக் காட்சி அமைப்பு உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

இதில் 1957, 58ஆம் ஆண்­டு­களில் வெளி­யான கேத்தே திரைப்­படங்­க­ளின் கதா­பாத்­தி­ரங்­க­ளைக் காண­லாம். தற்­போது உரு­மா­றி­விட்ட சிங்­கப்­பூ­ரின் பழைய நிலப்­பகு­தி­களை இந்­தப் பழைய படங்­களில் பார்க்க முடி­யும். இவற்­றை­யெல்­லாம் மீண்­டும் கண்­முன்னே காணும் ஆர்­வத்தை மக்­க­ளி­டம் விதைப்­பது 'கேத்தே ஹோட்­டல்' படைப்­பின் நோக்­கம்.

ஆகஸ்ட் 19, 20, 24, 25, 26 ஆகிய தேதி­களில் இத­னைக் காணக் கட்­ட­ணம் ஒரு­வ­ருக்கு 33 வெள்ளி; நான்கு நுழை­வுச்­சீட்­டு­களை 112 வெள்­ளிக்கு வாங்­கிக் கொள்­ள­லாம். இரவு 7.30 மணிக்­கும் 8.45 மணிக்­கும் நிழச்சி நடை­பெ­றும். வெள்ளி, சனிக்­கி­ழ­மை­களில் கூடு­தல் காட்சி இரவு பத்து மணிக்கு இடம்­பெ­றும்.

'எஸ்­டர்டே ஒன்ஸ் மோர்: குவீன்ஸ் ஸ்தி­ரீட்' என்­பது மற்­றொரு நிகழ்ச்சி. 'தோபீஸ்' எனப்­படும் இந்­திய சல­வைத் தொழி­லா­ளி­க­ளின் கதை­யைச் சொல்­லும் இந்த இசைப் படைப்பை, ஒடிசி நட­னக் கலை­ஞர்­கள், 'பபிள்' எனப்­படும் பிரம்­மாண்­ட­மான சவர்க்கார நீர்க்­கு­மி­ழி­களை உரு­வாக்­கும் 'சிஜே கேர்ள்' போன்­றோர் இணைந்து படைக்­கின்­ற­னர். ஆகஸ்ட் 19, 20, 26, 27 ஆகிய தேதி­களில் குவீன்ஸ் ஸ்தி­ரீட்­டின் வெவ்­வேறு பகு­தி­களில் இதை இல­வ­ச­மா­கக் காண­லாம்.

மேலும், 19ஆம் நூற்­றாண்டு இயற்கை வர­லாற்று ஓவி­யங்­க­ளின் அடிப்­ப­டை­யில் அமைந்த முப்­ப­ரி­மாண பறவை வடி­வி­லான காற்­ற­டைத்த பொம்­மைச் சிற்­பங்­களை இளம் உள்­ளூர்க் கலை­ஞர்­கள் 'ஃபோர்ட் கேனிங் பார்க்'கில் பல்­வேறு இடங்­களில் அமைத்­துள்­ள­னர். ஆகஸ்ட் 19 முதல் 27ஆம் தேதி வரை இவற்றை இல­வ­ச­மா­கக் காண­லாம்.

அத்­து­டன், ஸ்டாம்ஃபர்ட் கோர்ட்­டில் உள்ள மணிக்­கூண்­டின் மேல் ஒளிக்­காட்­சி­யைத் திரை­யி­டும் நட­வ­டிக்­கை­யும் இடம்­பெ­றும்.

பிராஸ் பாசா-பூகிஸ் வட்­டா­ரம் குறித்த படைப்­பு­கள், கூடு­த­லான உள்­ளூர்க் கலை­ஞர்­கள் ஆகிய இரண்டு அம்­சங்­களில் இவ்வாண்டு கவ­னம் செலுத்­தப்படுகிறது.

சிங்­கப்­பூர் இர­வுத் திரு­வி­ழாவை­ஒட்டி மொத்­தம் 55 நட­வ­டிக்­கை­களுக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்டு உள்ளது. இவற்­றில் சில:

'ஹீட் ஆஃப் த நைட்':

தேசிய நூலக வாரி­யம், 'இண்டி டூவர்ஸ்' ஆகி­யவை ஏற்­பாடு செய்­துள்ள புதிர்ப் போட்டி. வெவ்­வேறு இடங்­களில் உள்ள உத­விக் குறிப்­பு­க­ளைக் கொண்டு புதி­ருக்கு விடை கண்­டு­பி­டித்­தால் பரிசு உண்டு.

சிங்­கப்­பூர் தேசிய அரும்­ பொருளகத்­தில் ஆகஸ்ட் 19, 20, 26, 27 ஆகிய தேதி­களில் இரவு ஏழரை மணி முதல் நள்­ளி­ரவு வரை இது இடம்­பெ­றும் இந்­நி­கழ்ச்­சி­யில் கலந்­து­கொள்ள ஒரு­வ­ருக்­குக் கட்­ட­ணம் பத்து வெள்ளி; ஆறு பேர் கொண்ட குழு­வுக்கு ஐம்­பது வெள்ளி.

'எஸ்ஜி நைட்ஃபெஸ்ட் ஃபுட் டுவர்':

சிங்­கப்­பூர் மர­பு­டை­மை­யைப் பறை­சாற்­றும் உள்­ளூர் உணவு வகை­களை பிராஸ் பாசா வட்­டா­ரம் முழு­வ­தும் உண்டு களிக்­க­லாம்.

ஆகஸ்ட் 19, 26 ஆகிய தேதி­களில் அமர்ந்து உண்­ப­தற்­குக் கட்­ட­ணம் ஒரு­வ­ருக்கு ஐம்­பது வெள்ளி. ஆகஸ்ட் 20, 27 ஆகிய தேதி­களில் உல்­லா­சச் சுற்­றுலா போன்ற ஏற்­பாட்­டில் கலந்­து­கொண்டு உண­வ­ருந்த ஒரு­வ­ருக்­குக் கட்­ட­ணம் 35 வெள்ளி.

'எக்ஸ்ப்ளோர் எஸ்ஜி நைட் ஃபெஸ்ட் வித் ரிக்‌ஷா:'

சிங்­கப்­பூர் இர­வுத் திரு­வி­ழாவை 'ரிக்‌ஷா' எனப்­படும் மூன்று சக்­கர வாக­னத்­தில் ஏறி­யும் சுற்­றிப்­பார்க்­க­லாம். அக்­கால சிங்­கப்­பூ­ரில் இது பல­ரும் பயன்­ப­டுத்­திய போக்­கு­வரத்­தாக இருந்­தா­லும் இப்­போது சுற்­றுப்­ப­ய­ணி­கள் மட்­டுமே இதில் பய­ணம் செய்­கின்­ற­னர். வழக்­க­மாக ஒரு­வ­ருக்கு 49 வெள்ளி செலுத்த வேண்­டிய 'ரிக்‌ஷா' பய­ணத்­திற்கு, இர­வுத் திரு­வி­ழா­வின்­போது இரு­வருக்கு 40 வெள்ளி செலுத்­தி­னால் போதும்.

ஆகஸ்ட் 19, 20, 26, 27 ஆகிய தேதி­களில் இரவு எட்டு மணி முதல் பத்து மணி வரை இந்­தப் பய­ணத்தை மேற்­கொள்­ள­லாம்.