விளம்பர ஆதரவு பெற்ற நெட்ஃபிளிக்ஸ் திட்டத்தில் சில கட்டுப்பாடுகள்

விளம்பர ஆதரவு பெற்ற நெட்ஃபிளிக்ஸ் திட்டத்தில் சில கட்டுப்பாடுகள்

2 mins read
fe9cd769-d9a9-4206-b018-140280a34b09
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலம், சான் டியாகோவில் ஜூலை 23ஆம் தேதி நடைபெற்ற நெட்ஃபிளிக்ஸ் காட்சி. படம்: ஏஎஃப்பி -

நெட்­ஃபி­ளிக்ஸ் அதன் விளம்­பர ஆத­ரவு பெற்ற புதிய திட்­டத்­தில் பய­னா­ளர்­கள் நிகழ்ச்­சி­க­ளையோ திரைப்­ப­டங்­க­ளையோ பிறகு பார்ப்­பதற்கு தங்­கள் கைய­டக்­கச் சாத­னங்­களில் அவற்­றைப் பதி­வி­றக்­கம் செய்ய அனு­ம­திக்­காது. அந்­நி­று­வ­னத்­தின் ஐஃபோன் செய­லி­யில் உள்ள குறி­யீடு ஒன்­றில் இது தெரி­ய­வந்­துள்­ளது.

தற்­போது நெட்­ஃபி­ளிக்ஸ் வழங்கி வரும் திட்­டங்­களில் இருந்து புதிய திட்­டம் எவ்­வாறு வேறு­ப­டு­கிறது என்­பதை இந்த நட­வ­டிக்கை காட்­டு­கிறது.

பல்­லாண்டு கால­மாக விளம்­பரத்­தை­விட்டு ஒதுங்­கி­யி­ருந்த நெட்­ஃபி­ளிக்ஸ், அடுத்த ஆண்டு தொடக்­கத்­திற்­குள் விளம்­பர ஆத­ரவு பெற்ற திட்­டத்தை அறி­மு­கம் செய்ய திட்­ட­மி­டு­கிறது.

இத்­திட்­டத்­தில் பய­னா­ளர்­கள் விளம்­ப­ரங்­களை ஓட­விட முடி­யாது என்­ப­தை­யும் இக்­கு­றி­யீடு குறிப்­பிடு­கிறது. எனி­னும், இது­கு­றித்து கருத்­து­ரைக்க நெட்­ஃபி­ளிக்ஸ் மறுத்­து­விட்­டது.

இச்­சே­வை­யின் அறி­மு­கம் இன்­னும் ஒரு சில மாதங்­கள் இருப்­பதால், நெட்­ஃபி­ளிக்­சின் திட்­டங்கள் இன்­னும் இறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்­றும் இது கு­றித்த அதன் அணு­கு­முறை பின்­னர் மாற­லாம் என்­றும் தெரி­கிறது.

என்­றா­லும், நெட்­ஃபி­ளிக்­சி­டம் உள்ள சிறப்­பம்­சங்­கள், அதன் விளம்­பர ஆத­ரவு பெற்ற திட்­டத்­தில் கட்­டுப்­படுத்­தப்­படும் எனக் கூறப்­ப­டு­கிறது.

கொவிட்-19 பெருந்­தொற்று தொடங்­கிய சூழ­லு­டன் ஒப்­பி­டு­கை­யில், தற்­போது நெட்­ஃபி­ளிக்­சி­டம் வாடிக்­கை­யா­ளர்­கள் குறைந்­துள்­ள­னர். வால்ட் டிஸ்னி, அமே­சான்.காம், வார்­னர் புரோஸ் டிஸ்­க­வ­ரி­யின் எச்­பிஓ மேக்ஸ் ஆகிய நிறு­வனங்­க­ளி­டம் இருந்து நெட்­ஃபிளிக்ஸ் கடு­மை­யான போட்­டியை எதிர்­நோக்­கு­கிறது.

அமெ­ரிக்­கா­வி­லும் கன­டா­வி­லும் மட்டும் கடந்த காலாண்­டில் 1.3 மில்­லி­யன் வாடிக்­கை­யா­ளர்­களை நெட்­ஃபிளிக்ஸ் இழந்­தது.

டிஸ்­னி­யின் ஹுலு, வார்­னர் புரோ­சின் எச்­பிஓ மேக்ஸ், காம்­காஸ்ட்­டின் பீகாக் போன்­றவை வளர்ச்­சியை எட்ட ஏற்­கெ­னவே விளம்­பர ஆத­ரவு பெற்ற திட்­டங்­களைச் சார்ந்­துள்­ளன. எச்­பிஓ மேக்­சின் மலி­வுக் கட்­டண திட்­டத்­தில் திரைப்­ப­டங்­க­ளைப் பதி­வி­றக்­கம் செய்­வ­தற்­கான தெரிவு கிடை­யாது.