சிங்கப்பூர் தேசிய கவிதைப் போட்டி

சிங்­கப்­பூர் கவிதை விழா­வின் ஓர் அங்­க­மாக நடந்த தேசிய கவிதைப் போட்­டி­யில் வெற்றி பெற்­ற­வர்­களுக்­குப் பரி­ச­ளிப்பு விழா ஜூலை 30ஆம் தேதி லாசால் கலைக் கல்லூ­ரி­யி­லுள்ள, நீ ஆன் கோங்சி நூல­கத்­தில் நடந்­தே­றி­யது.

இவ்­வாண்டு ஆங்­கி­லத்­தில் 378 பேர், சீனத்­தில் 40 பேர், மலா­யில் 32 பேர் மற்றும் தமி­ழில் 34 பேர் என நான்கு மொழி­களில் நடத்­தப்­பட்ட கவி­தைப் போட்­டி­யில் 484 பேர் கவி­தை­களை எழு­தி­னர். கடந்த ஆண்­டை­விட 150க்கும் அதி­க­மா­னோர் போட்­டி­யில் கலந்து­கொண்­ட­னர்.

10 முதல் 14 வயது வரை­யிலான சிறார்­களுக்­கான பிரி­வில் 'வகுப்­பறை' என்ற கவி­தைக்­காக அஃபீஃபா அகமது முதல் பரி­சை­யும் 'வாழ்க்கை மலர்' என்ற கவி­தைக்­காக ஸ்ரீ ஹரி­ஹர் இரண்­டாம் பரி­சை­யும் 'சன்­னல் வெளியே பார்த்­த­போது' என்ற கவி­தைக்­காக ஜெனீலா மூன்­றாம் பரி­சை­யும் பெற்­ற­னர்.

15 முதல் 17 வயது வரை­யிலான இளை­யர்­க­ளுக்­கான பிரி­வில் 'கடலின் சிக­ரம்' என்ற கவி­தைக்­காக ரெமீலா முதல் பரி­சை­யும் 'தொழில்­நுட்­பம்' என்ற கவி­தைக்­காக அலீஃப் அக­மது இரண்­டாம் பரி­சை­யும் 'ஆனந்­தம் ஆரம்­பம்' என்ற கவி­தைக்­காக விஷா­லினி செல்­வ­ராஜ் மூன்­றாம் பரி­சை­யும் பெற்­ற­னர்.

18 வயது முதல் பெரி­ய­வர்­களுக்கான பிரி­வில் முதல் மற்­றும் இரண்­டாம் பரிசு யாருக்­கும் வழங்­கப்­ப­ட­வில்லை. 'தீயி­னால் சுட்­டாலும்' என்ற கவி­தைக்­காக பிரியா ஜெயக்­கு­மார் மூன்­றாம் பரி­சை­யும் 'விடி­யல் பறவை' என்ற கவி­தைக்­காக மில்­லத் அக­மது மற்­றும் 'முன்­பி­ருந்த கணத்­தின் மலர்ச்சி' என்ற கவி­தைக்­காக மோக­னப்­பி­ரியா தகுதிப் பரி­சை­யும் பெற்­ற­னர்.

தேசிய கலை­கள் மன்­றம் மற்றும் கிநோ­கு­னியா நூல்­கள் ஆத­ர­வில் பரிசு மற்­றும் சான்­றி­தழ்­களைக் கவிதை விழா அமைப்­பின் தமிழ்ப் பிரிவு இயக்­கு­ந­ரும் எழுத்­தா­ள­ரு­மான கன­க­லதா வழங்கிச் சிறப்­பித்­தார். இவ்­வாண்­டிற்­கான போட்­டி­யில் ஒரே குடும்­பத்­தைச் சேர்ந்­த­வர்­கள் பரி­சு­களை அள்ளிச் சென்­ற­னர்.

கவி­ஞர் நெப்­போ­லி­ய­னின் மகள்­கள் ரெமீலா, ஜெனீலா மற்றும் எழுத்­தா­ளர் மில்லத் அக­மது­வின் மகன் அலீஃப் அகமது, மகள் அ­ஃபீஃபா அகமது ஆகியோர் அவர்களில் அடங்குவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!