தேவையான பொருள்கள்: கேரட் - 3, பாதாம் தூள் - ஒன்றரை மேசைக்கரண்டி, பால் - அரை கப், பாதாம் பருப்பு - 10, சர்க்கரை - கால் கப் + 2 மேசைக்கரண்டி, உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை: கேரட்டை துருவி, ஒரு பாத்திரத்தில் கால் கப் தண்ணீர் ஊற்றி துருவிய கேரட்டை போட்டு 10 நிமிடம் வேக வைக்கவும். வெந்ததும் தண்ணீரை வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு ஒருமுறை அரைக்கவும். அதை ஒரு பாத்திரத்தில் போட்டு சர்க்கரை, பாதாம் தூள், பாதாம் பருப்பு, உப்பு, பால் ஆகியவற்றை சேர்த்து கலந்து அடுப்பில் சிறிது நேரம் கொதிக்க விடவும். கீர் திக்கான பதம் வந்தவுடன் அதை இறக்கி சூடாக குடிக்கலாம்.

