கூகல் குரோம், ஆப்பிள் கருவியைப் பயன்படுத்துவோர் கவனம்

விண்­டோஸ், மேக், லினக்ஸ் கணி­னி­களில் கூகல் நிறு­வ­னத்­தின் குரோம் இணை­யத்­தள உலா­வி­யைப் (browser) பயன்­ப­டுத்­து­வோர் அதன் ஆக அண்மைய மேம்­பாட்டை தர­வி­றக்­கம் செய்­யும்­படி ஆலோ­சனை கூறப்­பட்­டுள்­ளது.

சிங்­கப்­பூ­ரின் இணை­யப் பாது­காப்பு அமைப்பு அந்த ஆலோ­ச­னையை கடந்த வியா­ழக்­கி­ழமை அன்று விடுத்­தது.

குரோம் இணை­யத்­தள உலா­வி­யில் உள்ள பல்­வேறு குறை­பா­டு­க­ளைக் களை யும் பாது­காப்பு மேம்­பாட்டை கூகல் நிறு­வ­னம் வெளி­யிட்­டுள்­ளது.

அந்த 11 குறை­பா­டு­களில் ஒன்று மிக­வும் மோச­மா­னது. அதைக் கொண்டு இணைய ஊடு­ரு­வி­கள் தற்­போதே சாதா­ரண கணி­னி­க­ளை­யும் கரு­வி­க­ளை­யும் குறிவைக்­கத் தொடங்கி இருக்­க­லாம் என்று கூகல் கூறி­யது. குறை­பா­டு­கள் பற்றி அந்த நிறு­வ­னம் மேல்­வி­வ­ரம் வெளி­யி­ட­வில்லை.

இவ்­வே­ளை­யில் ஐஃபோன் கைப்­பே­சி­கள், ஐபேட் கைக்­க­ணி­னி­கள், மேக் கணி­னி­க­ளைத் தங்­கள் கட்­டுப்­பாட்­டுக்­குள் கொண்டுவர வழி­செய்­யும் பாது­காப்­புக் குறை­பாடு பற்றி ஆப்­பிள் நிறு­வ­னம் எச்­ச­ரித்­துள்­ளது.

அவ­சர மென்­பொ­ருள் மேம்­பாட்டை அது கடந்த புதன்­கி­ழ­மை­யும் வியா­ழக்­கி­ழ­மை­யும் வெளி­யிட்­டது.

ஐஃபோன் 6எஸ், ஐபேட் பிரோ, ஐபேட் ஏர் 2, 5வது தலை­முறை ஐபேட், ஐபேட் மினி 4 உள்­ளிட்ட பல கரு­வி­க­ளைக் குறை­பாடு பாதித்­தி­ருக்­கக்கூடும்.

பாது­காப்­புக் குறை­பாட்டை இணைய ஊடு­ரு­வி­கள் இப்­போ­தே­கொண்டு பயன் படுத்தி வரக்­கூ­டும் என்று ஆப்­பிள் நிறு­வ­னம் கூறி­யது. அனு­ம­தி­பெ­றாத மென்­பொ­ரு­ளைப் பயன்­ப­டுத்தி, ஐஃபோன், ஐபேட் கரு­வி­க­ளின் இயங்­கு­த­ளத்­தைத் தங்­கள் கட்­டுக்­குள் கொண்­டு­வர குறை­பாடு அனு­ம­திக்­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!