மூத்த தமிழறிஞர் டாக்டர் சுப. திண்ணப்பனுக்கு ஈரோடு புத்தகக் கண்காட்சியில் விருது

மூத்த தமிழறிஞர் டாக்டர் சுப. திண்ணப்பனுக்கு ஈரோடு புத்தகக் கண்காட்சியில் விருது

1 mins read
b2d2f49c-b230-44c6-a330-c91b062107e6
சிங்கப்பூரைச் சேர்ந்த மூத்த தமிழறிஞரான பேராசிரியர் சுப.திண்ணப்பனின் தமிழ்ப் பணிகளைப் பாராட்டி அவருக்கு 'தகைசால் தமிழ்ச் சான்றோர்' எனும் விருது இம்மாதம் 9ஆம் தேதி வழங்கப்பட்டது.படம்: மக்கள் சிந்தனைப் பேரவை -

தமிழ்­நாட்­டின் ஈரோட்­டைச் சேர்ந்த "மக்­கள் சிந்­த­னைப் பேரவை" அமைப்பு, சிங்­கப்­பூ­ரைச் சேர்ந்த மூத்த தமி­ழ­றி­ஞ­ரான பேரா­சி­ரி­யர் சுப.திண்­ணப்­ப­­னுக்கு 'தகை­சால் தமிழ்ச் சான்­றோர்' என்­னும் விருதை வழங்கி உள்­ளது.

அவ­ரது தமிழ்ப் பணி­க­ளைப் பாராட்டி விருது வழங்­கப்­பட்­டது.

கடந்த 18 ஆண்­டு­க­ளாக செயல்­பட்டு வரும் மக்­கள் சிந்­த­னைப் பேரவை அமைப்பு, பல்­லா­யி­ரம் பேரை ஈர்க்­கும் புத்­த­கக் கண்­காட்­சியை ஒவ்­வோர் ஆண்­டும் ஈரோட்­டில் நடத்தி வரு­கிறது.

இவ்­வாண்டு கண்­காட்­சி­யில் கடந்த 9ஆம் தேதி நடந்த பன்­னாட்­டுத் தமி­ழ­ரங்­கத்­தில் விருது அளிக்­கப்­பட்­டது.

மலே­சியா, சிங்­கப்­பூர், அமெ­ரிக்கா, தென்­கொ­ரியா, ஜெர்­மனி, ஸ்காட்­லாந்து, பிரான்ஸ், மாலத்­தீவு, ஜப்­பான், சுவிட்­சர்­லாந்து ஆகிய நாடு­க­ளி­லி­ருந்து வந்த 10 தமிழ் அறி­ஞர்­கள் அதில் பங்­கேற்­ற­னர்.

முன்­ன­தாக டாக்­டர் திண்­ணப்­பன் தலை­மை­யில் நடந்த சிறப்பு இணை அமர்­வில் தமிழ் வளர்ச்சி பற்­றிய சிந்­த­னை­கள், செயல்­கள் குறித்து விவா­திக்­கப்­பட்­டன.

டாக்­டர் சுப.திண்­ணப்­பன் தமது ஏற்­பு­ரை­யில் வள்­ளு­வர் வழங்­கும் 'நூல்' பற்­றிய சிறப்­பு­களை சுருக்­க­மாக விளக்­கிப் பேசி­னார்.

பொது­மக்­கள், மாண­வர்­கள் ­என 2,000 பேருக்­கு ­மேல் நிகழ்ச்­சி­யில் கலந்துகொண்­ட­னர்.

செய்தி: சிங்­கப்­பூர் தமிழ்

எழுத்­தா­ளர் கழ­கம்