புற்றுநோய் மரணங்கள்: பாதியைத் தவிர்க்கலாம்

புற்றுநோய் மரணங்கள்: பாதியைத் தவிர்க்கலாம்

2 mins read

உலக அள­வில் புற்­று­நோ­யால் ஏற்­படும் கிட்­டத்­தட்ட பாதி மர­ணங்­கள் தவிர்க்­கக்­கூ­டிய நோய் அபா­யக் கார­ணங்­க­ளால் நிகழ்­வ­தாக ஆய்வு ஒன்று கூறி­யுள்­ளது.

அவற்­றில் மது குடித்­தல், புகைப்­பி­டித்­தல், அதிக உடல் எடை ஆகிய மூன்­றும் புற்­று­நோய் மர­ணங் களுக்கு முக்­கிய கார­ணங்­க­ளாக இருந்­தன.

தி லான்­சட் ஆய்­வி­த­ழில் சென்ற வியா­ழக்­கி­ழமை வெளி­யான ஆய்வு இதைத் தெரி­வித்­தது.

வாஷிங்­டன் பல்­க­லைக்­க­ழ­கத்­தைச் சேர்ந்த ஆய்­வா­ளர்­கள், 204 நாடு­களில் 2000ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை­யில் புற்­று­நோ­யால் ஏற்­பட்ட புற்­று­நோய் மர­ணங்­க­ளை­யும் உடல்­கு­றை­பா­டு­ களை­யும் ஆய்வு செய்­த­னர். குறிப்­பாக, 23 வகைப் புற்று நோய்­களும் அவற்­றுக்­கான 34 அபா­யக் கார­ணங்­களும் ஆரா­யப்­பட்­டன.

நோய் அபா­யத்­தால் ஏற்­படும் புற்­று­நோய் பற்றி உல­கில் நடத்­தப்­பட்ட மிக விரி­வான ஆய்வு இது­வா­கும்.

புகைப்­பி­டித்­தல், மது, உடல் பருமன், மோச­மான உண­வுப் பழக்­கம், சுற்­றுச்­சூ­ழல் மாசு, வேலை­யில் அபா­ய­மான ரசா­ய­னங்­க­ளு­டன் தொடர்­பு­கொள்­ளு­தல் போன்­ற­வற்­றால் தவிர்க்­கக்­கூ­டிய புற்­று­நோய் அபா­யங்­க­ளா­கக் கரு­தப்­ப­டு­கின்­றன.

கடந்த 2010 முதல் 2019ஆம் ஆண்டு வரை இவைபோன்ற தவிர்க்கக்கூடிய காரணங்களால் ஏற்படும் புற்றுநோய் மரணங்கள் 20.4 விழுக்காடு உயர்ந்துள்ளது.

மேலும், 2019ல் மட்டும் புற்­று­நோ­யால் மாண்ட 4.45 மில்­லி­யன் பேருக்கு தவிர்க்­கக்­கூ­டிய கார­ணங்­க­ளால் அந்­நோய் ஏற்­பட்­டி­ருந்­தது. ஒட்­டு­மொத்த புற்­று­நோய் மர­ணங்­களில் இது 44 விழுக்­காடு ஆகும்.

அதனுடன், அந்­தக் கார­ணங்­ க­ளால் உடல்­ந­லத்­தோடு இருந்­தி­ருக்க வேண்­டிய ஆண்­டு­களில் 42 விழுக்­காட்டை நோயா­ளி­கள் இழந்­த­னர் என்று ஆய்வு கூறியது.

புற்­று­நோய் அபா­யக் கார­ணங் ­க­ளால் பெண்­க­ளை­விட ஆண்­கள் அதி­கம் பாதிக்­கப்­பட்­ட­னர். புகைப்­பி­டிக்­கும், மது அருந்­தும் பெண்­க­ளை­விட ஆண்­களே அதி­கம் என்­ப­தும் இதற்­குக் கார­ணம் என்று கூறப்­பட்­டது.

உடல் பரு­ம­னால் ஏற்­படும் புற்று நோய் மர­ணங்­கள் கடந்த பத்­தாண்­டு­களில் அதி­க­மாக உயர்ந்­துள்­ளன. இந்­தப் போக்கு குறிப்­பாக வள­ரும் நாடு­களில் அதி­கம் காணப்­பட்­டது.

புற்­று­நோயை ஏற்­ப­டுத்­தும் உலக அள­வில் புகைப்­பி­டித்­தல்­தான் புற்று நோய்க்கு முக்­கிய கார­ண­மாக தொடர்ந்து நில­வு­கிறது.

2019ல் ஏற்­பட்ட 36 விழுக்­காட்டு புற்­று­நோய் மர­ணங்­கள், மூச்­சுக்­ கு­ழாய், அதன் கிளைக்­கு­ழாய், நுரை­யீ­ரல் ஆகி­ய­வற்­றில் புற்­று­நோய் கார­ண­மாக இருந்­தது.

வயிறு, உண­வுக்­கு­ழாய், குடல் தொடர்­பான புற்­று­நோய் இரண்­டா­வது இடத்­தைப் பிடித்­தது.

"பழக்­க­வ­ழக்­கங்­களை மாற்­றி­னால் மில்­லி­யன் கணக்­கில் உயிர்­க­ளைக் காப்­பாற்­ற­லாம். எந்­தப் புற்று நோய் மருந்­தும் செய்­யக்­கூ­டி­ய­தை­விட இது பெரிது," என்று அமெ­ரிக்க புற்­றுே­நாய் எதிர்ப்­புச் சங்­கத்­தின் தலைமை விஞ்­ஞானி வில்­லி­யம் டாஹுட் கூறி­னார்.