வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, ஏலக்காய், கிராம்பு, சாதிக்காய், என வாசனைப் பொருட்கள் கலந்து தாம்பூலம் இடுவதற்கு சித்த மருத்துவம் வழி முறை களைக் கூறுகிறது.
ஆனால் மறுபக்கம், வெற்றிலைப் பாக்கு மெல்லும் பழக்கம் கெடுதல் என்றும் அதைச் சுண்ணாம்புடன் மென்றால் புற்றுநோய் வரக்கூடும் என்றும் கூறப் படுகிறது. இருப்பினும், குறிப்பாக வெற்றிலை உடலுக்கு பல நன்மை களைத் தர வல்லது.
வெற்றிலையை உலர வைத்து அதைப் பொடியாக்கி உண்ணும்போது உடலில் உள்ள சர்க்கரை அளவு குறையும். கெட்ட கொழுப்பை நீக்கும் தன்மையும் வெற்றிலைக்கு உள்ளது.
ஆஸ்துமா போன்ற நோய் களையும் உடலில் ஏற்படும் அழற்சியையும் கட்டுப்படுத்தும் கிருமி நாசினிகளும் வெற்றிலையில் உள்ளன. வாய், பற்களின் சுகாதாரத்தையும் அது காக்கிறது.
உடலில் மகிழ்ச்சியை உண்டாக்கும் 'கெட்டச்சோலமின்' சுரப்பு நீர் வெற்றிலையை மெல்லும்போது வெளியாகிறது. இதனால் மகிழ்ச்சி பெருகி, மன அழுத்தம் குறைவதாகவும் கூறப்பட்டுள்ளது.
வெற்றிலையில் உள்ள 'ஹைட்ரோக்சி செவிக்கால்' எனும் ரசாயனம் ஆண்களின் புரோஸ்டேட் சுரப்பியை வலுப்படுத்துகிறது.
இது மலட்டுத்தன்மையையும் புரோஸ்டேட் புற்றுநோய் அபாயத்தையும் தடுக்கும் ஆற்றல் கொண்டது.

