மத்திய தீயணைப்பு நிலையத்துக்கு கூத்தாநல்லூர் சங்கத்தினர் கற்றல் பயணம்

மத்திய தீயணைப்பு நிலையத்துக்கு கூத்தாநல்லூர் சங்கத்தினர் கற்றல் பயணம்

2 mins read
fa050482-5bb2-4796-84f8-ec7052ed8179
வாய்­வழி மூச்­ச­ளித்­தல் சிகிச்சை அளிக்­க­வும் கற்றுத்தரப்பட்டது. -
multi-img1 of 2

கூத்­தா­நல்­லூர் சங்­கத்­தைச் சேர்ந்த சில குடும்பங்கள், கடந்த 20ஆம் தேதி சனிக்­கி­ழமை மத்­திய தீய­ணைப்பு நிலை­யத்­துக்குச் சென்று அங்கு கற்­றல் பய­ணத்தை மேற்­கொண்­ட­ன.

ஹில் ஸ்த்­ரீட்­டில் அமைந்­துள்ள மத்­திய தீய­ணைப்பு நிலை­யம் சிங்­கப்­பூரின் ஆகப் பழ­மை­யான தீய­ணைப்பு நிலை­ய­மா­கும். இன்­றும் அது செயல்­பட்டு வரு­கிறது.

மத்திய தீய­ணைப்பு நிலை­யத்­தின் செயல்­பாடு பற்றி சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை அதி­கா­ரி­கள் விளக்­கி­னர்.

உத­வித் தொலை­பேசி எண்­ணான 995க்கு அழைப்பு வந்து, தங்­கள் நிலை­யத்­துக்கு அழைப்பு விடுக்­கப்­ப­டும்­போது அதி­கா­ரி­கள் செய்­யும் அனைத்­தை­யும் கைவிட வேண்­டும் என்று நிலை­யத்­தைச் சேர்ந்த ரோட்டா தள­பதி எல்.டி. மெலிசா வரு­கை­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­தார்.

கூத்­தா­நல்­லூர் சங்க உறுப்­பி­னர் களுக்கு குடி­மைத் தற்­காப்­புப் படை ஆம்­பு­லன்­சு­கள், தீய­ணைப்பு இயந்­தி­ரங்­கள், மோட்­டார் சைக்­கிள்­கள் ஆகி­ய­வற்­றில் அமர்ந்து அவற்­றின் சில சாத­னங்­க­ளைச் சோதிக்­கும் வாய்ப்பு கிடைத்­தது.

சிறு­வர்­களும் ஆம்­பு­லன்சு களுக்­குள் சென்று அவற்றை ஆராய்ந்­த­னர். தீய­ணைப்பு வீரர்­கள் நிலை­யத்­தில் உள்ள பிர­ப­ல­மான சறுக்­குக் கம்­பங்­களில் சரி­வ­தைப் பார்த்து வரு­கை­யா­ளர்­கள் மகிழ்ந்­த­னர்.

தீய­ணைப்பு வீரர்­கள், குடி­மைத் தற்­காப்பு அதி­கா­ரி­க­ளின் ஆடை களை­யும் தனிப்­பட்ட பாது­காப்­புச் சாத­னங்­க­ளை­யும் பார்த்­துத் தெரிந்­து­கொள்ள முடிந்­தது.

இத­யத்தை மீண்­டும் துடிக்க வைக்­கும் தானி­யங்­கிக் கரு­வி­யைப் பயன்­ப­டுத்­த­வும் வாய்­வழி மூச்­ச­ளித்­தல் சிகிச்சை அளிக்­க­வும் கூத்­தா­நல்­லூர் சங்­கத்­தி­னர் கற்­றுக்­கொண்­ட­னர்.

மூத்த தீய­ணைப்பு வீர­ரும் உயிர்­காக்­கும் நாய் பயிற்­சி­யா­ள­ரு­மான திரு சேகர், சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை­யின் மர­பு­டை­மைக் காட்­சி­ய­கத்­தை­யும் அவ­ச­ர­கால தயா­ரிப்பு நிலை­யத்­தை­யும் கூத்­தா­நல்­லூர் சங்­கத் தின­ருக்­குச் சுற்­றிக் காட்­டி­னார்.

சுமார் இரண்டு மணி­நே­ரத்­துக்கு அவர்­க­ளது குடும்­பத்­தா­ரு­டன் தமது அனு­ப­வங்­க­ளைப் பகிர்ந்து கொண்­டார்.

வரும் மாதங்­களில் குடி­மைத் தற்­காப்­புப் படை­யின் வேறொரு தீய­ணைப்பு நிலை­யத்­திற்­குச் செல்ல கூத்­தா­நல்­லூர் சங்­கம் திட்­ட­மிட்டு வரு­கிறது.

தீய­ணைப்பு நிலை­யங்­க­ளுக்கு வரு­கை­தர விரும்­பும் குழுக்­கள் அதற்கு பதிந்­து­கொண்டு சனிக்­கி­ழ­மை­களில் செல்­ல­லாம். மேல்­வி­வ­ரத்­துக்கு: https://www.scdf.gov.sg/home/community-volunteers/visit-scdf-establishments

செய்தி: கூத்­தா­நல்­லூர் சங்­கம்