'இது வெறும் தொடக்கம்தான்'

'இது வெறும் தொடக்கம்தான்'

2 mins read
65508475-72bc-4abf-976a-37540f0fb093
53வது நிமிடத்தில் யுனைடெட்டின் 2வது கோலைப் போட்டார் மார்க்கஸ் ரேஷ்ஃபர்ட். படம்: ஏஎஃப்பி -

இபிஎல் காற்பந்து: 2018ஆம் ஆண்டிற்குப்பின் முதன்முறையாக லிவர்பூலை வீழ்த்திய யுனைடெட்

மான்­செஸ்­டர்: ஆட்­டம் தொடங்­கு­முன் மான்­செஸ்­டர் யுனை­டெட் காற்­பந்­துக் குழு உரி­மை­யா­ளர்­களுக்கு எதி­ராகத் திட­லுக்கு வெளியே போராட்­டத்­தில் ஈடு­பட்ட ரசி­கர்­களை, ஆட்­டம் முடிந்­த­பின் கொண்­டாட்­டத்­தில் மூழ்­கும்­படி செய்­தது லிவர்­பூல் குழு­விற்கு எதி­ராக அக்­குழு 2-1 என்ற கோல் கணக்­கில் பெற்ற வெற்றி.

இப்­ப­ரு­வத்­தில் தான் ஆடிய முத­லிரு ஆட்­டங்­களில் தோற்­றுப்­போன யுனை­டெட் குழு­வின் செயல்­பாடு, லிவர்­பூ­லுக்கு எதி­ரான ஆட்­டத்­தில் பெரி­தும் மேம்­பட்­டி­ருந்­தது.

இங்­கிலிஷ் ஆட்­டக்­கா­ரர்­கள் ஜேடன் சாஞ்சோ 16வது நிமி­டத்­தி­லும் மார்க்­கஸ் ரேஷ்­ஃபர்ட் 53வது நிமி­டத்­தி­லும் அடித்த கோல்­கள் யுனை­டெட்­டின் வெற்­றியை உறு­தி­செய்­த­ன.

ஆட்­டம் முடிய ஒன்­பது நிமி­டங்­கள் இருந்­த­போது லிவர்­பூ­லின் நட்­சத்­திர வீரர் முகம்­மது சாலா அடித்த கோல், யுனை­டெட்­டின் முன்­னி­லை­யைக் குறைக்க முடிந்­ததே தவிர, அத­னால் வேறு பய­னே­தும் விளை­ய­வில்லை.

யுனை­டெட்­டின் புதிய நிர்­வாகி எரிக் டென் ஹாக்­கிற்கு பிரி­மி­யர் லீக்­கில் கிட்­டிய முதல் வெற்றி இது­தான். அத்­து­டன், 2018ஆம் ஆண்­டிற்­குப்­பின் லீக் ஆட்டங்களில் லிவர்­பூலை யுனை­டெட் வீழ்த்­தி­யதும் இதுவே முதன்­முறை.

அனு­பவ வீரர்­களான கிறிஸ்­டி­யானோ ரொனால்டோ, குழுத் தலை­வர் ஹேரி மகு­வேர் இரு­வ­ருக்­கும் முதல் பதி­னொ­ரு­வ­ரில் இட­ம­ளிக்­கப்­ப­ட­வில்லை. டென் ஹாக்­கின் இந்­தத் துணிச்­ச­லான முடி­விற்கு அரும்­ப­லன் கிட்­டி­யது.

போட்­டிக்­குப்­பின் பேசிய டென் ஹாக், "இது தொடக்­கம்­தான். அதே நேரத்­தில், எங்­கள் ஆட்­டக்­கா­ரர்­கள் தன்­ன­டக்­கத்­து­டன் இருக்க வேண்­டும். எங்­க­ளால் இன்­னும் நிதா­ன­மா­க­வும் அதே நேரத்­தில் அபா­ர­மா­க­வும் விளை­யாட முடி­யும்," என்­றார்.

கடந்த முறை இரண்­டாம் இடத்­தில் வந்த லிவர்­பூல், இது­வரை மூன்று ஆட்­டங்­கள் முடிந்­துள்ள நிலை­யில் ஒன்­றில்­கூட வெல்ல முடி­யா­மல், இரண்டு புள்­ளி­களை மட்­டுமே பெற்று, இப்­ப­ரு­வத்தை ஆக மோச­மா­கத் தொடங்கி இருக்­கிறது.

நடப்பு வெற்­றி­யா­ளர் மான்­செஸ்­டர் சிட்­டி­யை­விட ஐந்து புள்­ளி­களும் முத­லி­டத்­தில் இருக்­கும் ஆர்­ச­ன­லை­விட ஏழு புள்­ளி­களும் லிவர்­பூல் குழு குறை­வா­கப் பெற்­றி­ருப்­பது நிர்­வாகி யர்­கன் கிளோப்­பிற்­குக் கவ­லை­ய­ளிப்­ப­தாக அமைந்­து உள்­ளது.

"ஆட்­டத்­தின் முடிவு மிகுந்த ஏமாற்­ற­ம­ளிக்­கிறது. இது மகிழ்ச்­சி­ த­ரும் நிலை­மை­யன்று என்­பது தெளி­வா­கத் தெரி­கிறது," என்­றார் கிளோப்.

காயம் கார­ண­மாக பல முன்­னணி லிவர்­பூல் ஆட்­டக்­கா­ரர்­கள் மான்­செஸ்­ட­ருக்கு வர­வில்லை.

அத்­து­டன், 75 மில்­லி­யன் பவுண்டு விலைக்கு இப்­ப­ரு­வத்­தில் லிவர்­பூ­லு­டன் இணைந்த தாக்­கு­தல் ஆட்­டக்­கா­ரர் டார்­வின் நியூ­ன­சும் நேற்­றைய ஆட்­டத்­தில் கள­மி­றங்க முடி­யா­மல் போனது. கிரிஸ்­டல் பேல­சுக்கு எதி­ரான ஆட்­டத்­தில் சிவப்பு அட்டை பெற்று, மூன்று ஆட்­டங்­களில் விளை­யாட அவ­ருக்­குத் தடை விதிக்­கப்­பட்­டதே இதற்­குக் கார­ணம்.

முன்­ன­தாக, பிரென்ட்­ஃபர்ட் குழு­வி­டம் 4-0 எனப் படு­மோ­ச­மாகத் தோற்­ற­தால் திற­மை­மிக்க வீ­ரர்­களை ஒப்­பந்­தம் செய்­யத் தவறி­விட்­ட­தா­கக் கூறி யுனை­டெட் ரசி­கர்­கள் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். ஆனா­லும், போட்டி தொடங்­கு­முன் ரியால் மட்ரிட் குழு­வி­லி­ருந்து அண்­மை­யில் யுனை­டெட்­டிற்கு மாறிய பிரே­சி­லின் கச­மீரோ, ரசி­கர்­கள்­முன் அறி­மு­கம் செய்­யப்­பட்­டார்.

வரும் சனிக்­கி­ழ­மை­யன்று யுனை­டெட், சௌத்­ஹேம்­ட­னை­யும் லிவர்­பூல், போர்ன்­மத்­தை­யும் எதிர்த்­தாட இருக்­கின்­றன.