லண்டன்: ஆட்ட நடுவரின் நேர்மை குறித்துக் கேள்வி எழுப்பி, காற்பந்தாட்டத்திற்கு அவப்பெயர் தேடித் தரும் வகையில் நடந்துகொண்டதாக செல்சி காற்பந்துக் குழுவின் நிர்வாகி தாமஸ் டுக்கல் (படம்) மீது இங்கிலாந்துக் காற்பந்து சங்கம் (எஃப்ஏ) குற்றச்சாட்டு பதிவுசெய்துள்ளது.
இம்மாதம் 14ஆம் தேதி செல்சி - டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுக்கள் மோதிய இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.
ஆட்ட நடுவரும் காணொளி உதவி நடுவரும் தவறான முடிவுகளை எடுத்தது, ஸ்பர்ஸ் குழுவிற்கு உதவும் வகையில் அமைந்துவிட்டது என்று போட்டி முடிந்தபின் டுக்கல் சாடியிருந்தார்.
களத்திலேயே டுக்கலும் ஸ்பர்ஸ் நிர்வாகி கோன்டேயும் வாக்குவாதம் செய்ததால் இருவருக்கும் சிவப்பு அட்டை காட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

