நியூயார்க்: திடல்தடப் போட்டிகளில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த ஜமைக்காவின் உசேன் போல்ட், தமது தனிச்சிறப்புமிக்க வெற்றித் தோரணையை வணிகச் சின்னமாகக் கொண்டு, ஆடை அலங்காரப் பொருள்கள் விற்பனையில் கால்பதிக்கத் திட்டமிட்டு வருகிறார்.
அதன்தொடர்பில் அமெரிக்கக் காப்புரிமை, வணிகச் சின்ன அலுவலகத்தில் போல்ட் விண்ணப்பம் செய்துள்ளார்.
நகைகள், பணப்பைகள், குளிர்கண்ணாடிகள், காலணிகள், விளையாட்டுப் பொருள்கள் உள்ளிட்டவற்றை விற்கும் தொழிலில் இறங்க போல்ட் எண்ணியுள்ளார். அத்துடன், உணவகங்களையும் திறக்க இவர் முடிவுசெய்துள்ளார்.
பட்டியல் இன்னும் நீள்வதாகக் குறிப்பிட்டார் அமெரிக்காவைச் சேர்ந்த வணிகச் சின்ன வழக்கறிஞர் ஜோஷ் கெர்பன்.

