பழைய விறுவிறுப்புடன் புதிய பருவம்

புதன்கிழமை களநிலைமை

இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுக்களின் நிலையை அலசும் பகுதி

பிரசன்னா கிருஷ்ணன்

விறுவிறுப்பிற்குக் காத்துக்கொண்டு இருந்த காற்­பந்து ரசி­கர்­க­ளுக்­குப் பெரு­வி­ருந்­தாக அமைந்­தன கடந்த வார இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் ஆட்­டங்­கள்.

நடப்பு வெற்­றி­யா­ள­ரான மான்­செஸ்­டர் சிட்டி சம­நிலை காண சிர­மப்­பட்­டது. சென்ற பரு­வத்­தில் இரண்­டா­வது இடத்­தில் முடித்த லிவர்­பூல் தத்­த­ளித்­தது. மான்­செஸ்­டர் யுனை­டெட், லீட்ஸ் யுனை­டெட், நியூ­கா­சல் யுனை­டெட், பிரைட்­டன், ஃபுல்ஹம் போன்ற அணி­கள் எதிர்­பாரா வித­மாக சிறப்­பாக ஆடி தங்­கள் ரசி­கர்­க­ளுக்கு இன்ப அதிர்ச்சி தந்­தன.

தனது முதல் இரு ஆட்­டங்­களில் தோற்­ற­தோடு, இரண்­டா­வது ஆட்­டத்­தில் பிரென்ட்­ஃபர்ட்­டி­டம் படு­தோல்வி கண்ட மான்­செஸ்­டர் யுனை­டெட், தனது பரம எதி­ரி­யான லிவர்­பூலை 2-1 எனும் கோல் கணக்­கில் வென்று பல­ரின் வாயை அடைத்­தது. இது தற்­போ­தைய நில­வ­ரம் மட்­டுமே. மீட்சி தொட­ரா­விட்­டால் விமர்­ச­னங்­கள் மேலும் கடு­மை­யா­வது நிச்­ச­யம். அத­னால் இத­னு­டன் மன­நி­றைவு அடைந்­து­விட முடி­யாது.

எனி­னும், யுனை­டெட்­டின் புதிய நிர்­வாகி எரிக் டென் ஹாக் சற்றே நிம்­ம­திப் பெரு­மூச்­சு­வி­ட­லாம். குழு­வின் தன்­னம்­பிக்கை மீண்­டும் வள­ரக்­கூ­டும்.

சென்ற பரு­வத்­தில் இறுதி நாள் பட்­டப் போட்­டி­யில் இருந்த லிவர்­பூல், இம்­முறை தனது முதல் மூன்று ஆட்­டங்­களில் ஒன்­றைக்­கூட வெல்­ல­வில்லை. குழு­வின் ஆட்­டத்­தில் பழைய துடிப்பு இல்லை.

மான்­செஸ்­டர் சிட்­டி­யைத் திண­றச் செய்­தது நியூ­கா­சல் யுனை­டெட். பொது­வாக சிட்டி முத­லில் முன்­னி­லைக்­குச் சென்­றால் அதை அசைக்க முடி­யாது. அப்­ப­டி­யி­ருந்­தும் மீண்­டு­வந்து 3-1 எனும் கோல் கணக்­கில் முன்­னிலை பெற்று, வியப்­பில் ஆழ்த்­தி­யது நியூ­கா­சல்.

ஆட்­டம் 3-3 என்று சம­நி­லை­யில் முடிந்­த­போ­தும் தங்­க­ளா­லும் சிட்­டியை வெல்­ல­வி­டா­மல் செய்­ய­மு­டி­யும் என்ற நம்­பிக்கை பிற குழுக்­க­ளுக்­குப் பிறந்­தி­ருக்­க­லாம்.

ஆயி­னும், இரண்டு கோல் வித்­தி­யா­சத்­தில் தோல்­வியை நெருங்­கி­ய­போ­தும் அதி­லி­ருந்து மீண்டு வந்­தது சிட்­டி­யின் ஆற்­ற­லுக்­குச் சான்று.

பிரி­மி­யர் லீக்­கின் ஆகச் சிறந்த நான்கு குழுக்­களில் ஒன்­றாக உரு­வெ­டுக்க அதி­கம் செலவு செய்து புத்­து­யிர் பெற்­றுள்­ளது நியூ­கா­சல். சிட்­டிக்கு எதி­ராக ஆடி­ய­தைப்­போல் தொடர்ந்து ஆடி­னால் அக்­குழு இலக்கை அடை­வது உறுதி.

பரு­வம் தொடங்கி மூன்று ஆட்­டங்­களே முடிந்­துள்ள இத்­த­ரு­ணத்­தில் பிரைட்­டன், ஃபுல்ஹம் உள்­ளிட்ட குழுக்­கள் தொடர்ந்து சிறப்­பாக ஆடி­னால்­தான் அவற்­றைப் பற்­றிப் பெரி­தா­கப் பேச­மு­டி­யும். தற்­போ­தைக்கு அவற்­றின் முயற்­சி­யைப் பாராட்­ட­வேண்­டும்.

லீட்ஸ் யுனை­டெட்­டிற்­கும் கிட்­டத்­தட்ட அதே நிலை­தான். இருந்­தா­லும் அக்­குழு செல்­சியை 3-0 எனும் கோல் கணக்­கில் வீழ்த்­தி­யது யாரும் எதிர்­பார்க்­காத ஒன்று.

பல பெரிய குழுக்­க­ளால் அதி­கம் செய்ய இய­லாத ஒன்றை லீட்ஸ் சாதித்­துக்­காட்­டி­யது. யாருக்­கும் தாங்­கள் சளைத்­த­வர்­கள் அல்­லர் என்­ப­தைத் தங்­க­ளது செயல்­பாட்­டின் மூலம் லீட்ஸ் வீரர்­கள் மெய்ப்­பித்­துக்­காட்­டி­னர்.

தனது முதல் மூன்று ஆட்­டங்­களில் ஒன்றை மட்­டுமே வென்று உள்­ளது செல்சி. சரிவு தொடர்ந்­தால் செல்சி நிர்­வாகி தாமஸ் டுக்­கல் பதவி­நீக்­கம் செய்­யப்­பட்­டா­லும் வியப்­பில்லை.

ஏறத்­தாழ 18 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு அபா­ர­மா­க­விளை­யாடி பட்­டி­ய­லில் முத­லி­டம் வகிக்­கிறது ஆர்­ச­னல். எதி­ர­ணி­யின் தற்­காப்பு விளை­யாட்­டா­ளர்­களை மிக­வும் எளி­தாக எதிர்­கொண்டு கோல்­க­ளைப் போட்டு ஆர்­ச­னல் வெற்றி நடைபோடு­கிறது.

அதன் பரம எதி­ரி­யான டோட்­டன்­ஹம் ஹாட்ஸ்­பர் எதிர்­பார்ப்­பு­களை ஓரளவு பூர்த்­தி­செய்து வரு­கிறது. ஆர்­ச­னல் தனது மூன்று ஆட்­டங்­களி­லும் வென்­றுள்­ளது. ஸ்பர்ஸ் குழு இரண்­டில் வென்று, ஒன்­றில் சம­நிலை கண்­டுள்­ளது.

பரு­வம் தொடங்கி மூன்று ஆட்­டங்­களே முடிந்­துள்­ள­தால் அடுத்து வரும் வாரங்­களில் அவை எவ்­வ­ளவு சிறப்­பாக விளை­யா­டும் என்­பதை இப்­போதே கணிக்க முடி­யாது. நிலைமை தலை­கீ­ழா­க­வும் மாற­லாம்.

லீக்­கில் அதிக விறு­வி­றுப்பு இல்லை என்ற குறை இருந்துவந்த நிலையில், அந்நிலை மாறு­வதற்­கான அறி­கு­றி­கள் தென்­படுகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!