நோய் எதிர்ப்பு ஆற்றலுக்குக் கைகொடுக்கும் நாவல் பழம்

நோய் எதிர்ப்பு ஆற்றலுக்குக் கைகொடுக்கும் நாவல் பழம்

2 mins read
7aa877a6-2dca-438f-933c-66899d5dd28f
-

நாவல் மரத்­தின் இலை, விதை, பட்டை, பழம் என அனைத்­தும் மருத்­துவ குணங்­கள் நிறைந்­தவை.

புற்­று­நோயைத் தடுக்கும் ஆற்­றல் நாவல் பழத்­திற்கு உண்டு என்று சொல்­லப்­ப­டு­கிறது.

'ஆன்டி ஆக்­ஸி­டன்ட்' அதி­க­மாக நிறைந்­தி­ருப்­ப­தால், இது மிகச் சிறந்த நோய் எதிர்ப்பு சக்­தி­யைத் தரும் உண­வாகக் கருதப்படுகிறது.

நாவல் பழத்­தில் அதி­க­மான நார்ச்­சத்து, வைட்­ட­மின்-சி, வைட்­ட­மின்-கே, மக்­னீ­சி­யம் போன்ற சத்­து­களும் நிறைந்­தி­ருக்­கின்­றன.ஆனால் இதில் கலோரி அளவு குறைவு. எனவே இது உடல் எடை­யைக் கட்­டுக்­குள் வைத்­தி­ருப்­ப­வர்­கள் தயங்­கா­மல் உண்­ப­தற்கு ஏற்ற உண­வா­கக் கரு­தப்­ப­டு­கிறது.

இதில் அதிக அளவு வைட்­ட­மின்-சி, இரும்­புச் சத்து ஆகி­யவை இருப்­ப­தால், உட­லில் ரத்த உற்­பத்­தி­யினை அதி­க­ரிக்­கும்; ரத்த சோகை நோய் வரா­மல் காக்கவும் உத­வும். உடல் ஆரோக்­கி­யத்­தை­யும் இது மேம்­ப­டுத்­தும் என்­பது கூடு­தல் நன்மை.

இதய நோய்­கள் வரா­மல் தடுப்­ப­தில் நாவல் பழத்­திற்கு முக்­கிய இட­முண்டு. நாவல் பழம் மூளை­யின் செயல்­தி­றனை அதி­க­ரிக்க உத­வு­வ­து­டன் நினை­வாற்­ற­லை­யும் அதி­க­ரிக்­கின்­றது.

இதில் இனிப்­பின் அளவு மிகக் குறை­வாக இருப்­ப­தால், நீரி­ழிவு நோய் உள்­ள­வர்­களும் இதை உண்­ண­லாம்.

சிறு­நீர்த் தொற்று ஏற்பட்டவர்கள் நாவல் பழத்தை சாப்­பிட்டு வந்­தால் விரை­வில் குண­மா­க­லாம்.

தின­மும் நாவல் பழம் சாப்­பிட்­டால் எலும்­பு­கள் வலு­வ­டை­யும். நாவல் பழத்­தில் அதி­க­ளவு நார்ச்­சத்து நிறைந்­தி­ருப்­ப­தால் மலச்­சிக்­க­லால் துன்­பப்­ப­டு­வோ­ருக்கு இது நல்ல தீர்­வாக இருக்­கும். வெறும் வயிற்றில் உண்பதைத் தவிர்க்கவும். எந்த உண­வை­யும் போலவே நாவல் பழங்­களை அள­வோடு உண்டு வந்­தால் அதன் நன்­மை­களை முழு­மை­யா­கப் பெற­லாம்.

தக­வல், படம்: இணை­யம்