"உன்னை இப்போதே தீர்த்துகட்டுவேன்": ஆசிரியரை மிரட்டிய மாணவன்

"உன்னை இப்போதே தீர்த்துகட்டுவேன்": ஆசிரியரை மிரட்டிய மாணவன்

1 mins read
274ed5b1-87bb-47d8-9807-98faaaba2963
படம்: ROBINHOOT.SG/இன்ஸ்டாகிராம் -

ஆசிரியர் ஒருவரை மிரட்டிய செயின்ட் ஆன்ட்ரூஸ் மாணவன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அப்பள்ளி தெரிவித்துள்ளது. பள்ளி அதிகாரிகளிடம் அவமதிப்பாக நடந்துகொள்வதை பள்ளி சகித்துகொள்ளாது என்று கூறப்பட்டது. மாணவன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவனுடைய பெற்றோரை சந்தித்து மாணவனுக்கு ஆலோசனை வழங்கவும், அவனுக்கு வழிகாட்டவும் அவர்களுடன் சேர்ந்து பள்ளி செயல்படும் என்று பள்ளி கூறியது.

ஆசிரியர் ஒருவரை மாணவன் மிரட்டும் காணொளி சமூக தளங்களில் பகிர்ந்துகொள்ளப்பட்டது. இந்த 56 வினாடி நீளமான காணொளியில் ஒரு வகுப்பறையில் ஆசிரியரை மாணவன் மிரட்ட, மற்ற மாணவர்கள் அதை வேடிக்கை பார்த்துகொண்டிருந்தனர்.

தன்னை திட்டவேண்டாம் என்று ஆசிரியர் கூற, அதற்கு தன்னுடைய முகக்கவசத்தை அகற்றி, நீ என்ன செய்யமுடியும் என்று மாணவன் பதிலளிக்கிறான். இருவருக்கும் வாக்குவாதம் நடக்க, மற்ற மாணவர்களின் சிரிப்பொலி பின்னணியில் கேட்டிகிறது.

மற்றொரு காணொளியில் தன்னை தொடவேண்டாம் என்று ஆசிரியர் கூற, அதற்கு உன் உயிரை இப்போதே முடிப்பேன் என்று மாணவன் மிரட்டுகிறான்.

இந்த காணொளி பேஸ்புக் தளத்தில் 84,000க்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.

மேலும் தகவல் அறிய தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பள்ளியை தொடர்புகொண்டுள்ளது.