வந்திருப்பது மனச்சோர்வா வாழ்க்கைமுறைச் சோர்வா?

வந்திருப்பது மனச்சோர்வா வாழ்க்கைமுறைச் சோர்வா?

2 mins read
eef3ec97-e3e6-44d6-a040-443eae99a9df
-

வேலை­யி­டத்­திலோ வீட்­டிலோ 'ஒரே களைப்­பாக இருக்­கிறது' எனச் சிலர் கூறக் கேட்­டி­ருப்­பீர்­கள். உட­லில் தெம்பு இல்­லா­மல் எப்­படி அன்­றைய தினத்­தைச் சமா­ளிக்­கப் போகி­றோம் என்­று­கூட அவர்­கள் புலம்­பு­வர். வீட்டை விட்டு வெளி­யில் அடி­யெ­டுத்து வைக்­க­வும் தயங்­கு­வர். இவ்­வ­கை­யான சோர்­வுக்கு என்­ன­தான் கார­ணம்?

கொவிட்-19 கொள்­ளை­நோய்­தான் மிகப் பெரிய குற்­ற­வாளி. வீட்­டி­லேயே கிட்­டத்­தட்ட ஈராண்டு­க­ளாக முடங்கி, பிற­ரு­டன் அதி­கத் தொடர்பு இல்­லாத நிலை­யில் வாழ்க்கை திருப்தி அளிக்­கா­த­து­போல் தோன்­ற­லாம்.

உணர்­வு­களில் மூழ்கி, வாழ்க்­கை­யில் இது­வரை எடுத்த முடி­வு­க­ளைப் பற்றி கேள்வி எழுப்பி, கடந்த காலத்தை நினைத்து வருந்தி, உற­வு­களை ஒவ்­வொன்­றாக ஆராய்ந்து நிகழ்­கா­லத்­தில் என்ன நடக்­கிறது என்­பதை உணர்ந்­து­கொள்ள முடி­யாத ஒரு நிலை­யில் சில­ருக்கு மனச்­சோர்­வும் ஏற்­பட்­டுள்­ளது.

இருப்­பி­னும் தனக்கு வந்­திருக்­கும் சோர்வு, வாழ்க்­கை­முறை­யின் விளை­வாக ஏற்­பட்­டதா என்­பதை முத­லில் ஆரா­ய­வேண்­டும். ஒரு தேக்க நிலை, அல்­லது பழ­கிப்­போன அதே பாதை­யில் தின­மும் செல்­லும் ஒரு­வ­ருக்கு வாழ்க்­கை­மு­றைச் சோர்வு ஏற்­பட்­டி­ருக்­க­லாம்.

அதற்­கு­முன் இந்­தப் பட்­டி­ய­லில் இடம்­பெ­றும் கேள்­வி­களில் எத்­தனை கேள்­வி­க­ளுக்கு நீங்­கள் 'ஆமாம்' என்று பதி­ல­ளிக்­கி­றீர்­கள் என்று சோதித்­துப் பாருங்­கள்:

 ஒவ்­வொரு நாளும் உங்களுக்கு அதே­போல் நகர்வதா­கத் தோன்­று­கி­றதா?

 உங்­க­ளின் வேலை, சலிப்­புத் தட்­டும் வகை­யில் மன­நி­றைவை அளிக்­காத வண்­ணம் உள்­ளதா?

 உங்­கள் வீட்டை விட்டு வெளி­யேற விருப்­பம் இல்­லையா?

 நண்­பர்­க­ளை­யும் சமூக உறவாடல்­க­ளை­யும் நீங்­கள் தவிர்க்க முயல்­கி­றீர்­களா?

 மனி­தர்­க­ளைக் காட்­டி­லும் கணினி, தொலைக்­காட்­சித் திரை­க­ளு­டன் நீங்­கள் செலவழிக்கும் நேரம் அதி­கமா?

 உங்­க­ளின் புத்­தாக்க ஆர்வத்தை இழந்­து­விட்­டீர்­களா?

 உங்­க­ளின் தோல்­வி­களை நினைத்து நீங்­கள் தின­மும் ஆவே­சப்­ப­டு­கி­றீர்­களா?

 அள­வுக்கு அதி­க­மா­கச் சாப்பிடு­தல் அல்­லது சரி­யா­கச் சாப்­பி­டா­தி­ருத்­தல் இவ்­வி­ரண்­டில் ஒன்­றைச் செய்­கி­றீர்­களா?

 உங்­க­ளுக்கு முன்பு மகிழ்ச்­சி­தந்த நட­வ­டிக்­கை­கள் இப்­போது நேர விர­ய­மா­கத் தோன்­று­கி­றதா?

இந்­தக் கேள்­வி­களில் குறைந்­தது ஐந்து கேள்­வி­க­ளுக்­கா­வது நீங்­கள் 'ஆமாம்' என்று பதி­ல­ளித்­தி­ருந்­தால், வாழ்க்­கை­மு­றைச் சோர்­வில் நீங்­கள் சிக்­கி­யி­ருக்­க­லாம்.

இதி­லி­ருந்து எப்­படி விடு­ப­டு­வது? மாற்­றம் ஒன்றே வழி. ஒரே மாதி­ரி­யான நட­வ­டிக்­கை­களில் அன்­றா­டம் ஈடு­ப­டு­வதை முத­லில் தவிர்க்க வேண்­டும்.

எப்­போ­தும் எழும் நேரத்­தை­விட முன்­ன­தா­கவே எழுந்­து­வி­டுங்­கள். இர­வில் நேரத்­தோடு தூங்­கச் செல்­லுங்­கள். நண்­ப­ரைத் தொடர்­பு­கொண்டு சந்­தித்­துப் பேசுங்­கள். திரை­ய­ரங்­கம் அல்­லது கலை­நி­கழ்ச்­சிக்­குச் செல்­லுங்­கள்.

சலிப்­பூட்­டும் அல்­லது அடுத்து என்ன நடக்­கும் எனக் கணிக்­கும் வகை­யில் உங்­க­ளின் நாள் நக­ரா­த­வாறு புதுப்­புது நட­வ­டிக்­கை­களை நாடுங்­கள்.

இல்­லத்­த­ர­சி­கள் தங்­க­ளின் சமை­ய­ல­றையை மாற்றி அமைக்­க­லாம், இளை­யர்­கள் தங்­க­ளின் நண்­பர்­க­ளு­டன் கடற்­கரை அழ­கில் திளைக்­கும் ஒரு சுற்­றுப்­ப­ய­ணத்­திற்­குச் செல்­ல­லாம், மாண­வர்­கள் தாங்­கள் படிக்­கும் இடத்தை மாற்­ற­லாம். இப்­படி சிறு சிறு மாற்­றங்­கள் செய்து உங்­க­ளின் மன­துக்­கும் உட­லுக்­கும் உற்­சா­கம் அளிக்­கும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டால் வாழ்க்­கை­முறை மாறும், சோர்வு தணி­யும்.

செய்தி: இணை­யம்,

படம்: பிக்­சபே