அவாண்ட் நாடகக் குழுவின் ‘சிவகாமி’

மாதங்கி இளங்­கோ­வன்

கல்கி கிருஷ்­ண­மூர்த்­தி­யின் 'சிவகா­மி­யின் சப­தம்', செப்­டம்­பர் 16, 17ஆம் தேதி­களில் புக்­கிட் மேரா­வி­லுள்ள கேட்வே அரங்­கத்­தில் அவாண்ட் நாட­கக் குழு­வால் மேடை­யேற்­றப்­ப­டு­கிறது.

'4ஜி' நாட­கத்­திற்­குப் பிறகு மீண்­டும் உள்­ளூர் நாட­கக் கலை­ஞர்­க­ளோடு 'சிவ­காமி' நாட­கம், திரு க.செல்­வா­வின் எழுத்­தி­லும் இயக்­கத்­தி­லும் உரு­வெ­டுத்­துள்­ளது.

நாடக வடி­வத்­தில் இந்த­கதையை எழுத உத­வி­யுள்­ளார் ஸ்ரீ கணேஷ் லக் ஷ்மி­நா­ரா­ய­ணன்.

புத்­தக வடி­வில் அமை­வ­தற்கு முன்­னர், 'சிவ­கா­மி­யின் சப­தம்' கல்கி பத்­தி­ரி­கை­யில் நான்கு பாகங்­க­ளாக 1944 முதல் 1946 வரை வெளி­யி­டப்­பட்­டது.

'சிவ­கா­மி­யின் சப­தம்' கதை­யின் ஒவ்­வொரு பாக­மும் முடி­யும்­போது, அடுத்து என்ன நடக்­கும் என வாச­கர்­கள் ஆவ­லு­டன் இருந்த காலம் முடிந்து இன்று அக்­க­தையை மீண்­டும் மீண்டும் வாசிக்க விரும்பும் ரசி­கர் கூட்­டம் பெருகிவிட்­டது.

காஞ்­சி­யி­லி­ருந்து வந்த பர­த­நாட்­டிய நட­ன­ம­ணி­யான சிவ­காமி, தம் வாழ்க்­கை­யில் அனு­ப­வித்த அவல நிலையை விவ­ரிக்­கும் 'சிவ­கா­மி­யின் சப­தம்', இந்­திய சுதந்­தி­ரப் போராட்­டம் நடந்­த­போது எழு­தப்­பட்­ட­தால் சிவ­கா­மி­யின் கதா­பாத்­தி­ரம், இந்­திய தேசத்­தின் போராட்­டங்­க­ளை­யும் பிர­தி­ப­லிப்­ப­தாக ஆரா­யப்­பட்­டது.

சிவ­காமி தம் புனிதமான கலை­யைக் கொண்டு சாளுக்­கிய அர­சன் புலி­கே­சி­யால் ஒடுக்­கப்­பட்ட மக்­களை விடு­விக்­கப் போரா­டு­வதை­யொட்டி செல்­கின்­றது இந்த சிவ­காமி சப­தத்­தின் கதை­யோட்­டம்.

அவாண்ட் நாட­கக் குழு­வின், 'சிவ­காமி' நாட­கத்­திற்கு மகா­கவி பார­தி­யா­ரின் பேர­னான ராஜ்­குமார் பார­தி­ இசை­ய­மைத்­த­தோடு சங்­கீத் நயக் அகா­டமி விருது வென்ற கையன் சிங்­கின் வரை­கலை வடி­வ­மைப்­பை­யும் செய்­துள்­ளார்.

அது­மட்­டு­மல்­லா­மல் சிங்­கப்­பூர் மற்­றும் இந்­தி­யா­வைச் சேர்ந்த தலை­சி­றந்த நட­ன­ம­ணி­களும் இந்த நாட­கத்­திற்கு நட­னம் அமைத்­துள்­ள­னர்.

'சிவ­காமி' நாட­கத்­தின் நுழை­வுச்­சீட்­டு­க­ளைப் பெற சிஸ்­டிக் இணை­யப்­பக்­கத்தை பொது­மக்­கள் அணு­க­லாம்.

பிள்­ளை­கள், மூத்­தோர், மாண­வர்­கள், தேசிய சேவை­யாற்­று­பவர்­க­ளுக்கு நுழை­வுச்­சீட்­டு­கள் 30 வெள்­ளிக்கு விற்­கப்­ப­டு­கின்­றன. மற்­ற­வர்­கள் $35 கட்­ட­வேண்டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!