சிங்கப்பூரில் திடீரென மழை பெய்துவருகிறது. இவ்வாறு பருவம் மாறும்போது ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
குறிப்பாக, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் உணவு வகைகளைச் சாப்பிடுவது சிறப்பு. பிளம்ஸ் (plum) பழத்தையும் இஞ்சியையும் கொண்டு சாறு தயார் செய்து குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.
இதற்கு 5 பிளம்ஸ் பழங்களைச் சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். அவற்றுடன் ஒரு துண்டு இஞ்சியைச் சேர்த்து தண்ணீர் ஊற்றி அரைக்கவும். வடிகட்டிய கலவையில் சிறிதளவு தேனைச் சேர்த்துக்கொண்டால் கசப்பும் புளிப்பும் குறையும்.

