நூல் ஆய்வு விவாதத்துடன் நடந்த நூல் வெளியீட்டு விழா

எழுத்­தா­ளர் மில்­லத் அக­மது எழு­திய உல­கச் சாதனை ஆங்­கில நூலான 'ஐந்து வார்த்தை சிறு­கதை', 'சிங்­கப்­பூ­ரில் சர­வ­ணன்', 'மறக்­க­வி­யலா அம­ரா­வ­தி­யின் அம­ர­கா­வி­யம்' ஆகிய மூன்று நூல்­களும் கடந்த சனிக்­கி­ழமை மாலை, தேசிய நூலக வாரி­யக் கட்­ட­டத்­தின் 16வது மாடி­யில் உயிர்­மெய் பதிப்­ப­கத்­தின் ஏற்­பாட்­டில், வெளி­யீடு கண்­டன.

சிறப்பு விருந்­தி­ன­ராக வரு­கை­யளித்த இந்து அறக்­கட்­டளை வாரி­யத்­தின் துணைத் தலை­வர் முனை­வர் இரா. தினகரன், ஐந்து வார்த்தை சிறு­கதை பற்றி பாராட்­டிப் பேசி­னார்.

அதன் பிறகு உயிர்­மெய் பதிப்­பகம் சார்­பில் மூத்த எழுத்­தா­ளர் கம­லா­தேவி அர­விந்­த­னுக்கு 'இலக்கிய வித்­தகி விருது', இலக்­கி­யப் பேச்­சா­ள­ரும் கல்­வி­யா­ள­ரு­மான முனை­வர் சரோ­ஜினி செல்­லக்­கி­ருஷ்­ண­னுக்கு 'செம்­மொழி மாநிதி விருது', பெரி­யார் சமூக சேவை மன்­றத்­தின் தலை­வர் வீ.கலைச்­செல்­வ­னுக்கு 'சேவைச் செம்­மல் விருது', இசைக்­கவி மதி­ய­ழ­க­னுக்கு 'மின்­னி­லக்க ஓவி­யர் விருது' ஆகி­யவை வழங்­கப்­பட்­டன.

மேலும், உல­கச் சாதனை படைத்­துள்ள ஐந்து வார்த்தை சிறு­கதை நூலுக்கு வாழ்த்­துச் செய்­தி­ய­ளித்த அமைப்­பு­க­ளுக்கு நினை­வுப்­ப­ரி­சு­களும் ஆத­ர­வா­ளர்­க­ளான தேசிய நூலக வாரி­யம் மற்­றும் தமிழ் முரசு நாளி­த­ழுக்கு நன்­றிக் கேட­ய­மும் வழங்­கப்­பட்­டது.

நூல் வெளி­யீட்­டின் சிறப்பு அம்­ச­மாக, நூல் ஆய்வு விவா­தம் ஒன்றை முனை­வர் சரோ­ஜினி செல்­லக்­கிருஷ்­ணன் தலை­மை­யேற்று நடத்தி­னார்.

உல­கச் சாதனை குறும்­ப­டம் திரை­யி­டப்­பட்டு அனை­வ­ரின் பாராட்­டை­யும் பெற்­றது. நிறை­வாக நூலா­சி­ரி­யர் மில்­லத் அக­மது நன்றி­யுரை கூறி­னார்.

செய்தி: ஏற்­பாட்­டுக் குழு­வி­னர்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!