சிங்கப்பூரின் 57ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு தேசிய தினப் பற்றுறுதி நிகழ்ச்சி மற்றும் கொண்டாட்டத்திற்கு இந்திய முஸ்லிம் பேரவையும் நாகூர் தர்கா இந்திய முஸ்லிம் மரபுடைமை நிலையமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. இம்மாதம் 14ஆம் தேதியன்று நடந்தேறிய இந்நிகழ்வுக்கு, ஜாலான் புசார் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் ஜாலான் புசார் நகர மன்றத் தலைவருமான டாக்டர் வான் ரிசால் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். தேசிய கீதம் பாடப்பட்டு, பென்கூலன் பள்ளிவாசல் நிர்வாக்குழு தலைவர் ஹாஜி முஹம்மது ரஃபீக் சிங்கப்பூர் பற்றுறுதியைக் கூற, வருகையாளர்கள் அனைவரும் பற்றுறுதி எடுத்துக்கொண்டனர். இந்த நிகழ்வு, பல்லின மக்கள் கலந்துகொண்டு மகிழ்ந்த ஒரு கொண்டாட்டமாக நிறைவடைந்தது.
படம்/செய்தி: ஏற்பாட்டுக் குழுவினர்

