எண்ணற்ற விளக்குகள், எல்லையில்லா அழகில் மிளிரும் ஏரித் தோட்டம்

எண்ணற்ற விளக்குகள், எல்லையில்லா அழகில் மிளிரும் ஏரித் தோட்டம்

2 mins read
792af258-c58f-4cc8-a77c-f0ef56647cd1
'லைட்ஸ் பை த லேக்' விழாவில் கூண்டு விளக்குகள் விற்பனை மூலம் கிடைக்கும் தொகை அதிபர் சவால் அறநிதிக்கு வழங்கப்படும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 2

வண்ண ஒளி உமி­ழும் அலங்­கார விளக்­கு­கள், பல வடி­வங்­களிலான 'லேண்­டர்ன்' எனப்­படும் கூண்டு விளக்­கு­கள் ஆகி­ய­வற்­றால் களை­கட்­டி­யி­ருக்­கிறது ஜூரோங் ஏரித் தோட்­டம்.

இந்த ஆண்­டின் இலை­யு­திர்­கா­லக் கொண்­டாட்­டத்­தைக் குறிக்­கும் வித­மாக 'லைட்ஸ் பை த லேக்' விழாவை நேற்று முன்­தி­னம் ஒளி­யூட்டு நிகழ்ச்­சி­யின் மூலம் அதி­பர் ஹலிமா யாக்­கோப் தொடங்கி வைத்­தார்.

அடுத்த மாதம் 11ஆம் தேதி வரை நடை­பெ­ற­வி­ருக்­கும் இந்த விழா­வில் கலை நிகழ்ச்­சி­களும் இடம்­பெ­றும். பாரம்­ப­ரிய சீன இசைக்­க­ரு­வி­க­ளோடு மேற்­கத்­திய இசைக்­க­ரு­வி­களும் வாசிக்­கப்­படும் நிகழ்ச்­சி­கள் வெள்ளி, சனிக்­கி­ழ­மை­களில் இர­வில் நடை­பெ­றும்.

'ஆக்­டிவ் எஸ்ஜி', 'பேஷன் வேவ்' ஆகி­ய­வற்­று­டன் இணைந்து பொது­மக்­க­ளுக்­கா­கப் பல்­வேறு நட­வ­டிக்­கை­க­ள் ஏற்­பாடு செய்யப்பட்டுள்ளன. அந்தி சாயும் நேரத்­தில் வழி­காட்­டி­யு­டன் கூடிய நடைப் பய­ணம், கூண்டு விளக்கு விடு­க­தை­கள் போன்­ற­வற்­றில் அவர்­கள் பங்­கேற்­க­லாம். அதி­பர் சவால் நிகழ்ச்­சி­யு­டன் இணைந்து நடை­பெ­றும் இவ்­வாண்டு விழா­வில் பல்­வேறு கூண்டு விளக்­கு­களும் தொட்­டி­யில் வளர்க்­கப்­படும் 'போன்­சாய்' மரங்­களும் விற்­ப­னைக்கு வைக்­கப்­பட்­டி­ருக்­கும். இதன் மூலம் திரட்­டப்­படும் நிதி அதி­பர் சவால் அற­நி­திக்கு வழங்­கப்­படும்.

அன்­றா­டம் இரவு 7 மணி­யி­லி­ருந்து 11 மணி வரை ஒரு கருப்­பொ­ரு­ளைச் சார்ந்து வடி­வ­மைக்­கப்­பட்­டி­ருக்­கும் பிரம்­மாண்­ட­மான கூண்டு விளக்­கு­கள் ஒளி­யூட்­டப்­பட்­டி­ருக்­கும். காண்­ப­வர் கண்­ணைக் கவ­ரும் இத்­த­கைய 12 விளக்­கு­கள் அடுத்த மாதம் 18ஆம் தேதி வரை ஜூரோங் ஏரித் தோட்­டத்தை அலங்­க­ரிக்­கும்.

'ஏ ஸ்மார்ட் மீடியா', மக்­கள் கழ­கம், தென்­மேற்கு சமூக மேம்­பாட்டு மன்­றம் ஆகி­ய­வற்­று­டன் இணைந்து 'லைட்ஸ் பை த லேக்' விழா­விற்கு தேசி­யப் பூங்­காக் கழ­கம் ஏற்­பாடு செய்­துள்­ளது. இதற்கு தேசி­யக் கலை மன்­ற­மும் எஸ்­பி­எச் மீடி­யா­வின் சீன ஊட­கக் குழு­ம­மும் ஆத­ரவு வழங்­கு­கின்­றன.