அர்ப்பணிப்பை வலியுறுத்தும் அன்பான ஆண் தாதி ரெங்கநாதன்

மோன­லிசா

செய்­யும் தொழி­லுக்­கும் பாலி­னத்­திற்­கும் எவ்­விதத் தொடர்பும் இல்லை என்­று உத்­வே­கத்­து­டன் கூறுகிறார் ஆண் தாதி­யான கி. ரெங்­க­நா­தன் (படம்). நேர்­மை­யும் அர்ப்­ப­ணிப்பு உணர்­வும் வேட்­கை­யும் இருந்­தால் எந்தத் தொழி­லி­லும் யாரா­லும் சாதிக்க இய­லும் என்பது இவரது உறுதியான நம்பிக்கை.

தொற்றுநோய்களுக்கான தேசிய சிகிச்சை நிலை­யத்­தில் பணி­பு­ரி­யும் இவர் தாதி­ய­ருக்­கான சிறப்­புத் தகுதி விரு­தைப் பெற்­றுள்­ளார்.

சிறு­வ­யது முதலே புத்­த­கம் வாசிக்­கும் பழக்­கம் உள்ள ரெங்கநாதன், 'எய்ட்ஸ்' நோய் பற்­றிய ஒரு புத்­த­கம் தன்னை மிக­வும் பாதித்­த­தா­கக் கூறி­னார். 'எச்­ஐவி' தொற்­றிய நோயா­ளி­கள்­மீது காட்­டப்­படும் பாகு­பாடு முறை­யற்­றது என்று உணர்ந்ததால், தாமே தாதி­யாகி அவர்­க­ளுக்கு உதவ வேண்­டும் என்று முடி­வெ­டுத்­தார்.

தற்போது இவர் 'எச்­ஐவி' தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ரி­டையே தகுந்த விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­து­வ­தி­லும் 'எச்­ஐவி' நோயா­ளி­களுக்­குச் சிகிச்­சை­ய­ளிக்­கும் சக தாதி­ய­ருக்கு எளி­மை­யான சிகிச்சை முறை­க­ளைக் கற்­றுக்­கொ­டுப்­ப­தி­லும் அதி­கக் கவ­னம் செலுத்தி வரு­கி­றார்.

'ஏன்டிரெட்ரோவைரல் தெரபி' எனும் சிகிச்சைமுறை 'எச்­ஐவி' தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு அதி­கம் பய­னுள்­ள­தாக இருக்­கிறது என்­றும் இம்­மு­றை­யில் உள்ள சிகிச்­சை­களை சரி­யா­கப் பின்­பற்­றி­னால் 'எச்­ஐவி' நோயா­ளி­களும் எவ்­வித சிர­ம­மும் இல்­லா­மல் சரா­சரி வாழ்க்­கையை மேற்­கொள்ள இய­லும் என்­றும் தாதி ரெங்­க­நா­தன் கூறி­னார்.

நிலை­யத்­தில் 'எச்­ஐவி' நோயா­ளி­க­ளுக்­கான தாதி­யர் பரா­ம­ரிப்பு முறை­களை மேம்­ப­டுத்­தும் நோக்­கில், விளம்­ப­ரத் தட்­டி­கள் மூலம் எளிய முறை­யில் தாதி­ய­ருக்குக் கற்­பிக்­கும் முயற்­சி­யில் ஈடு­பட்டு வரு­கி­றார். இதே போன்று 'எச்­ஐவி' தொற்று பற்­றிய பல்­வேறு தக­வல்­களையும் சேக­ரித்து வரு­கி­றார்.

குறிப்­பாக, புதி­தாக 'எய்ட்ஸ்' நோய் கண்­ட­றி­யப்­ப­டு­வோ­ருக்கு ஆரம்­ப­கால சிகிச்சைமுறை­கள் பற்­றிய தக­வல்­களை ஒன்­று­தி­ரட்டி கற்­றல் வளங்­க­ளை­யும் உரு­வாக்கி வரு­கி­றார்.

தொடர்ந்து 10வது ஆண்­டா­கத் தாதி­மைத் தொழி­லில் ஈடு­பட்­டுள்ள இவர், "2016ஆம் ஆண்­டில் ஒரு 80 வயது மூதாட்டி என் 'வார்­டில்' இருந்­தார். நான் அவரை மிகுந்த கனி­வு­ட­னும் அக்­க­றை­யு­ட­னும் கவ­னித்த முறை­யி­னால் ஈர்க்­கப்­பட்ட அவர் என்னை அவ­ரு­டைய பேரன் என்றே அழைத்­தார்.

"உடல்­நிலை மோச­மான நிலை­யில் வாழ்நாளின் கடை­சித் தரு­ணங்­களை என்­னு­டனே கழித்­தார். புன்­ன­கைத்த நிலை­யில் அவர் உயிர் என் கண்­முன்னே பிரிந்­தது. சில நாள்­கள் கழித்து அவ­ரு­டைய மகள் எனக்கு நன்றி கூறி அனுப்­பிய கடி­தம் வாழ்­வின் அர்த்­தத்தை எனக்கு உணர்த்­தி­யது," என்று நெகிழ்­வு­டன் கூறி­னார்.

கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வல் காலத்­தில் பாதிக்­கப்­பட்ட வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு சிகிச்சை அளித்­தது ரெங்கநாதனுக்கு மறக்க முடி­யாத அனு­ப­வம். அவர்­க­ளு­டன் தமி­ழில் உரை­யாடி மருத்­து­வர்­க­ளி­டம் அதனை மொழி­பெ­யர்த்­துக் கூறி­யதால் மேம்­பட்ட சிகிச்­சை­ சாத்தியமானது ­என்றார்.

அந்தச் சூ­ழ­லில் பெரும்பாலான நோயா­ளி­கள் மிகுந்த கவ­லை­யி­லும் மன அழுத்­தத்­தி­லும் இருந்­த­தால் அவர்­களைப் பொறு­மை­யு­ட­னும் நிதா­னத்­து­ட­னும் கையா­ளு­வது மிகுந்த சவா­லாக இருந்­தது என்று குறிப்பிட்டார்.

தாதிமைத் தொழிலில் கூடுதல் நேரம் பணியாற்றவேண்டி ய சூழல் இருந்தாலும், மன­த்திற்­கும் உட­லுக்­கும் போதிய ஓய்வு அளிக்க, நேரத்தை முறையாகத் திட்­ட­மிட்டு வகுப்­ப­தாகக் கூறிய இவர், நோயா­ளி­க­ளுக்கு மேம்­ப­ட்ட சிகிச்­சை­முறை­க­ளு­டன் அன்­பு, அக்­க­றை­யோடு கூடிய பரா­ம­ரிப்­பை­யும் வழங்­கு­வ­தையே தன் வாழ்­நாள் லட்­சி­ய­மாகக் கொண்­டுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!