இராமாவதார நோக்கம் நிறைவேறப் பெரிதும் துணை நின்றது அன்பா? வீரமா? என்ற தலைப்பில் நாளை மாலை 6.30 மணிக்கு பிஜிபி அரங்கில் கம்பராமாயணச் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற இருக்கிறது.
ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில், இந்து அறக்கட்டளை வாரியம், தமிழ்ப் பட்டிமன்றக் கலைக்கழகம் ஆகியவை இணைந்து நடத்தும் இந்தப் பட்டிமன்றத்தில் தமிழகத்தின் புகழ்பெற்ற ஆன்மிக, பட்டிமன்றப் பேச்சாளர் கி சிவக்குமார் நடுவராகக் கலந்துகொள்கிறார்.
'இராமாவதார நோக்கம் நிறைவேறப் பெரிதும் துணைநின்றது வீரமே!' என முனைவர் சரோஜினி செல்லக்கிருஷ்ணன் தலைமையில் திருமதி ராஜி ஸ்ரீநிவாசனும் சிங்கப்பூர் சீனப் பெண்கள் பள்ளி மாணவி விஷ்ருதா நந்தகுமாரும் பேசவிருக்கிறார்கள்.
'அன்பே துணைநின்றது' என முனைவர் ந. செல்லக்கிருஷ்ணன் தலைமையில் திரு உமாஷங்கர் நாராயணனும் விக்டோரியா பள்ளி மாணவர் ரவிகுமார் சிவ்ரிஷியும் பேசவிருக்கிறார்கள்.
தமிழ்மொழிப் பண்பாட்டுக் கழகம், லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடமைச் சங்கத்தின் ஆதரவோடு நடக்கும் இப்பட்டிமன்றத்தைக் காண அனுமதி இலவசம்.

