கரியமில வாயுவை வெளியேற்றாத, சுற்றுச்சூழலுக்கு உகந்த 'ஹைட்ரஜன்' ரயில் (படம்) வர்த்தக ரீதியான சேவையை வழங்கத் தொடங்கிவிட்டது. அண்மையில் ஜெர்மனி இதனை அறிமுகம் செய்தது.
ஹைட்ரஜன், ஆக்சிஜன் ஆகிய வாயுக்களைக்கொண்டு தயாரிக்கப்படும் மின்சாரத்தில் இயங்கும் இந்த ரயில் நீராவியையும் தண்ணீரையும்தான் வெளியிடும். கூடுதலாகத் தயாரிக்கப்படும் மின்சாரத்தைச் சேமிக்க மின்கலனும் பொருத்தப்பட்டுள்ளது. ஒருமுறை எரிபொருள் கலனை நிரப்பினால் ஏறத்தாழ 1,000 கிலோமீட்டர் வரை இதில் பயணம் செய்யலாம்.

