நெஸ்லே நிறுவனம் 'வீகன்' எனப்படும் விலங்குகளில் இருந்து பெறப்படும் உணவுவகைகளைத் தவிர்ப்போருக்கான புதிய சாக்லெட்டை அறிமுகப்படுத்தி உள்ளது.
'கிட்கேட் வி' என்பது அதன் பெயர். முழுவதும் தாவரப் பொருள்களால் தயாரிக்கப்படும் இந்த சாக்லெட் நேற்று பிரிட்டன் உள்ளிட்ட 15 நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதில் பாலுக்குப் பதில் அரிசியில் இருந்து தயாரிக்கப்படும் பால்போன்ற பொருள் பயன்படுத்தப்படுவதாக புளூம்பெர்க் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டு உள்ளது.
தாவரப் பொருளால் ஆன இதனைத் தயாரிக்க நெஸ்லே நிறுவனத்துக்கு இரண்டு ஆண்டுகள் பிடித்தன. நிறுவனம் நடத்திய கருத்தாய்வில் 40 விழுக்காட்டு வாடிக்கையாளர்கள் தாவரப் பொருளால் ஆன இத்தகைய சாக்லெட்டுகளையே இனி உண்ண விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த நெஸ்லே நிறுவனத்தின் இந்தப் புதிய முயற்சி வர்த்தக ரீதியாக வெற்றி பெறுமா என்பதை உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்கள் தரும் ஆதரவுதான் முடிவு செய்யும் என்பதை ஆய்வாளர்கள் சுட்டியுள்ளனர்.