'இடர்களைத் தவிர்க்க நினையாமல் திடமாக எதிர்கொள்ளுங்கள்'

'இடர்களைத் தவிர்க்க நினையாமல் திடமாக எதிர்கொள்ளுங்கள்'

2 mins read
379785c6-5e71-417f-abfa-e14a6593a3e4
-

பொன்­மணி உத­ய­கு­மார்

'சிங்­கப்­பூர் பிசி­னஸ் ரிவியூ' சஞ்­சி­கை­யின் 40 வய­திற்­குக் குறை­வான சிறந்த 10 சொத்து முக­வர்­க­ளின் பட்­டி­ய­லில் இடம் பெற்­றுள்­ள­வர் டாலஸ் ஹசான் (படம்).

தன் இளம் வய­தில் சொந்த வீட்­டி­லி­ருந்து வாடகை வீட்­டிற்கு மாறிய கசப்­பான அனு­ப­வம் இவ­ருக்கு உண்டு. கூட்­டுத் தொழி­லில் இவ­ரது தந்தை எதிர்­கொண்ட நிதிச் சிக்­கல்­களே அதற்­குக் கார­ணம்.

தேசிய சேவை செய்து கொண்­டி­ருந்த டால­சால் அப்­போது குடும்­பத்­திற்­குப் பெரி­தும் கைகொ­டுக்க இய­ல­வில்லை. ஆனால், தேசிய சேவைக்­குப் பிறகு சொத்­துச் சந்தை தொடர்­பான பயிற்­சியை முடித்து பகு­தி­நேர சொத்து முக­வ­ரா­கப் பணி­பு­ரி­யத் தொடங்­கி­னார்.

அப்­போது 'ரிச் டெட், புவர் டெட்' எனும் நூலைப் படிக்க நேர்ந்­தது. சொத்­துச் சந்­தை­யைப் புதிய கோணங்­களில் அணுகி தன் வெற்­றிக்­குப் பாதை வகுத்­துத் தந்­தது அந்த நூல்­தான் என்­கி­றார் டாலஸ்.

குடும்­பத்­தின் நான்கு பிள்­ளை­களில் மூத்­த­வ­ரான டாலஸ் தன் குடும்ப உறுப்­பி­னர் ஒவ்­வொ­ரு­வ­ரும் சொந்­த­மாக வீடு வாங்க வேண்­டும் என்று ஊக்­கு­வித்­த­து­டன் உத­வி­யும் செய்­தி­ருக்­கி­றார். இளம் வய­தில் எதிர்­கொண்ட சம்­ப­வங்­க­ளின் தாக்­கம்­தான் தனக்கு உந்­து­த­லாக இருந்­த­தாக இவர் கூறு­கி­றார்.

கடந்த இரு­பது ஆண்­டு­களாக சொத்­துச் சந்­தைத் துறை­யில் வேலை­செய்­யும் டாலஸ், தற்­போது 'ஆரஞ்ச்டீ & டை' நிறு­வ­னத்­தில் மூத்த மாவட்ட இயக்­கு­ன­ரா­கப் பணி­யாற்­று­கி­றார். இவர் 60 முக­வர்­க­ளைக் கொண்ட குழு­வின் தலை­மைப் பொறுப்­பில் இருக்­கி­றார்.

வீடு வாங்­கு­வோ­ருக்­குப் பொறுப்­பான முறை­யில் அறி­வுரை கூறும்­படி தன் குழு­வி­ன­ரி­டம் இவர் வலி­யு­றுத்­து­கி­றார். கார­ணம், வீடு வாங்­கும் பரி­வர்த்­த­னை­யோடு தங்­க­ளது வேலை முடிந்து விடு­வ­தாக இவர் கரு­த­வில்லை. வீடு வாங்­கு­வோ­ரின் குடும்­பங்­க­ளை­யும் அவர்­க­ளது நிதிச் சூழ்­நி­லை­க­ளை­யும் கருத்­தில் கொண்டு செயல்­ப­டு­வ­தும் சொத்து முக­வர்­க­ளின் பொறுப்பு என்றே இவர் கரு­து­கி­றார்.

சென்ற ஆண்டு 400 குடும்­பங்­கள் புதிய வீட்­டில் குடி­யேற இவரது தலைமையிலான குழு உத­வியது.

வாடிக்­கை­யா­ளர்­கள் பலர் நண்­பர்­க­ளா­கப் பழ­கு­வ­தா­கக் கூறிய டாலஸ், பய­னா­ளர்­க­ளின் கூடு­தல் எதிர்­பார்ப்­பு­களை நேர­மின்­மை­யால் தொடர்ந்து நிறை­வேற்ற முடி­வ­தில்லை என்­றார்.

இந்­தத் துறை­யில் தன்­னைத் தனித்­துக் காட்­டு­வது, விடா­மு­யற்­சி­யும் எதை­யும் செய்­யக்­கூ­டும் என்ற நம்­பிக்­கை­யுமே என்று குறிப்­பிட்­டார்.

"ஒரு­வர் அடி­பட்­டுத்­தான் வாழ்க்­கை­யில் ஊக்­கம் பெற வேண்­டும் என்­ப­தில்லை," என்று சொல்­லும் டாலஸ், "இடர்­க­ளைத் தவிர்க்க வேண்­டும் என்று நினைப்­ப­தைக் காட்­டி­லும் திட­மான மனத்­து­டன் அவற்றை எதிர்­கொள்­வதே சிறப்பு," என்­று கூறினார்.

எந்­தச் செய­லி­லும் ஆக்­க­க­ர­மாக ஈடு­ப­டு­வ­தன் அவ­சி­யத்­தை­யும் அவர் வலி­யு­றுத்­தி­னார்.

சொத்­துச் சந்­தைத் துறை­யைப் பொறுத்­த­வரை வானமே எல்லை என்பது டாலசின் அசைக்க முடியாத நம்பிக்கை.

தனக்­கு மிகப் பெரிய இலக்­கு­கள் இல்­லை­யென்­றா­லும் தொடர்ந்து தன் பணி­யின் மூலம் பலரை நல்லமுறை­யில் ஊக்­கு­விக்­க­வும் தன்­னைப் போன்றே மற்­ற­வர்­களும் வெற்­றி­பெற வழி­வகுக்­க­வும் முனைந்­துள்­ளார்.

படம்: டாலஸ் ஹசான்