மாதங்கி இளங்கோவன்
ஐந்து இளையர்களின் வாழ்க்கைப் பயணங்களைச் சித்திரித்து, வழக்கமான பாதைக்கு மாறான அரிய கனவுகளைக் காண தயங்க வேண்டாம் என்ற நோக்கத்துடன் இசை, நடன நிகழ்ச்சி இடம்பெறவுள்ளது.
பிரம்மாஸ்த்திரா குழுவினர், மற்ற இளையர்களுடன் சேர்ந்து 'என் அடையாளம்' என்னும் நிகழ்ச்சியைப் படைக்கவிருக்கின்றனர்.
ஓல்ட் பார்லிமண்ட லேனில் இருக்கும் 'தி ஆர்ட்ஸ் ஹௌஸ்' வளாகத்தில், வரும் சனிக்கிழமை 3ஆம் தேதி நடக்கும் இந்த நிகழ்ச்சி பிற்பகல் 4.30 மணி முதல் இரவு 7.30மணி வரை நடைபெறும்.
உள்ளூர் கலைஞர் நிரஞ்சன் பாண்டியன் பிரம்மாஸ்த்ததிரா 2015ல் இசைக்குழுவை தொடங்கினார். இக்குழு உலகம் முழுவதும் உள்ள பல்வேறு இசைக் குழுக்களுடன் இசை நிகழ்ச்சி களைப் படைத்துள்ளது. கர்நாடக இசை மட்டுமல்லாமல், அதுவும் 'ஜாஸ்' இசையும் கலந்த 'இண்டோ-ஜாஸ்' போன்றவற்றை பிரம்மாஸ்த்ரா அதன் நிகழ்ச்சிகளில் படைத்துள்ளது.
தேசிய கலை மன்றத்தின் உபகாரச் சம்பளத்தைப் பெற்ற நிரஞ்சன் பாண்டியன், லாசெல் கலைப்பள்ளியில் இசைக் கல்வி யில் பட்டம் பெற்றவர்.
'ஜாஸ்' இசையில் நிபுணத்துவம் பெற்ற இந்தப் புல்லாங்குல் இசைக்கலைஞர், இண்டோ- ஜாஸ் இசையை 'என் அடையாளம்' நிகழ்ச்சியில் அதிகம் பயன்படுத்தப் போவதாகப் பகிர்ந்து கொண்டார்.
புதிய முகங்களும் திறமைவாய்ந்த பல இளையர்களும் இணைந்துள்ளதால் என் 'அடையாளம்' நிகழ்ச்சி பார்வையாளர் களைக் கவரும் என்று நம்புவதாக ஏற்பாட்டளர்கள் கூறினர்.

