வேலையில் முனைப்பைத் தவிர்க்கும் போக்கு

வேலையில் முனைப்பைத் தவிர்க்கும் போக்கு

2 mins read

உல­கம் எங்­கும் உள்ள நிறு­வன நிர்­வா­கி­க­ளுக்கு தற்­போது பெரும் சவா­லாக இருக்­கிறது 'குவா­யட் குவிட்­டிங்' எனப்­படும் போக்கு.

கொவிட்-19 பர­வ­லால் வேலை­யி­டங்கள் இயங்­கும் முறை மாறி­ய­தைப் போல வேலை குறித்த கண்­ணோட்­டங்­களும் மாறின.

அமெ­ரிக்கா போன்ற இடங்­களில் பலர் வேலையை விட்­ட­னர். அதைத் தொடர்ந்து வேலை­யில் குவா­யட் குவிட்­டிங் எனும் இப்­போக்கு தலை­தூக்கி உள்­ளது.

வேலை­யில் செய்ய வேண்­டி­யதை மட்­டும் செய்­து­விட்டு, அதற்கு அப்­பால் சிறி­தும் முனைப்பு காட்­டா­மல் இருப்­ப­து­தான் இந்­தப் போக்கு.

டிக் டாக் சமூக ஊட­கத் தளங்­களில் இந்­தப் போக்கு பல­ரி­டம், குறிப்­பாக இளை­யர்­க­ளி­டம் காணப்­ ப­டு­கிறது. இவர்­க­ளின் கணக்­கு­க­ளை­யும் பதி­வு­க­ளை­யும் பல மில்­லி­யன் பேர் பின் தொடர்­கின்­ற­னர்.

இந்­தப் போக்­கைக் கடை­ப்பி­டிப்­ப­வர்­கள் பெரும்­பா­லும் வேலையை விட்­டு­விட்டு தற்­போது வேறு வேலைக்­குச் செல்ல முடி­யா­த­வர்­கள். இத்­த­கை­யோர் வேலை நேரத்­தைக் கடந்து கூடு­தல் நேரம் செய்­வ­தில்லை.

பணிக்­கப்­பட்ட வேலை­கள் மட்­டுமே செய்­கின்­ற­னர். கூடு­தல் ஊதி­யம் இல்­லா­மல் கூடு­தல் வேலை பார்க்க மறுக்­கின்­ற­னர்.

வேலை நேரத்­தைத் தவிர்த்த மற்ற நேரங்­களில் இவர்­கள் அதன் தொடர்­பான மின்­னஞ்­சல்­க­ளையோ சமூக ஊட­கத் தக­வல் தளங்­க­ளையோ பார்ப்­ப­தைத் தவிர்க்­கின்­ற­னர்.

வேலை, வாழ்க்கை இல்லை என்­றும் அதி­கப் பணிச் சுமை­யால் ஏற்­படும் அழுத்­தம் வேண்­டாம் என்­றும் இவர்­கள் கூறு­கின்­ற­னர். கூடு­தல் முனைப்பு காட்­டு­வ­தால் பயன்­களை விட பிரச்­சி­னை­களே அதி­கம் என்­பதும் இவர்­க­ளின் வாதம்.

வேலை­யில் நிறைவு குறைந்­தி­ருப்­ப­தைத்தான் முனைப்பு காட்ட மறுக்­கும் இந்தப் பழக்­கம் என்று நோட்­டிங்­ஹம் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் நிறு­வன நடத்­தைத் துறை இணைப் பேரா­சி­ரி­யர் மரியா கொர்­டோ­விஸ் குறிப்­பிட்­டார்.

சீன சமூக ஊட­கங்­களில் தீ போல பர­விய பழக்­கம்­தான் வேலை­யில் கூடு­தல் முனைப்பு காட்­டாத இந்­தப் போக்­குக்கு வித்­திட்­ட­தா­கக் கூறப்­பட்­டுள்­ளது.

'#டாங்­பிங்' எனும் ஹேஷ்­டேக் குறி, சீனா­வில் சென்ற ஆண்டு பிர­ப­ல­மா­னது. பலன்­த­ராத, பொரு­ளற்ற வேலை­க­ளைச் செய்து அலுத்­து­விட்­டோம் என்ற சீனாவின் இளைய ஊழி­யர்­கள், தங்­கள் பிரச்­சி­னை­க­ளுக்கு நீட்­டிப் படுத்து ஓய்வு எடுப்­பதை வாழ்க்­கைத் தீர்­வாக முன்­வைத்­த­னர்.

சீன அர­சாங்­கம் நட­வ­டிக்கை எடுத்­ததை அடுத்து இந்த வழக்­கம் குறைந்­தா­லும் மற்ற நாடு­களில் இது தொற்­றிக் கொண்­டுள்­ளது.

வேலை­யி­டத்­து­டன் பிணைப்­பும் சரி­யான, வெளிப்­ப­டை­யான உரை­யா­டல்­களும் இல்­லா­த­தால் வேலை­யில் கூடு­தல் முனைப்பு காட்­டாத இப்­போக்கு அதி­க­ரித்­துள்­ளது என்று எழுத்­தா­ள­ரும் நிறு­வன உத்­தி­பூர்வ ஆலோ­ச­க­ரு­மான சிமோன் அஹுஜா கூறி­னார்.

ஊழி­யர்­க­ளின் கருத்­து­களை மேல் அதிகாரிகள் கேட்டறிந்து அவற்றுக்கு மதிப்பு கொடுத்தால்தான் பிணைப்பு அதிகரிக்கும் என்றார் அவர்.