எஃப்1: 14ஆம் நிலையில் தொடங்கியும் முதல் ஆளாகப் பந்தயத்தை முடித்தார்

எஃப்1: 14ஆம் நிலையில் தொடங்கியும் முதல் ஆளாகப் பந்தயத்தை முடித்தார்

1 mins read
d438e2df-d9ed-4c46-af4c-3025ac5a77e0
உலக வெற்றியாளர் பட்டத்தை நெருங்கும் வெர்ஸ்டாப்பன். படம்: ஏஎஃப்பி -

பிர­சல்ஸ்: பெல்­ஜிய கிராண்ட் பிரீ ஃபார்முலா 1 கார் பந்­த­யத்தை 14ஆம் நிலை­யி­லி­ருந்து தொடங்­கி­யும், அதி­வே­க­மாக காரை ஓட்டி, முதல் ஆளாக வந்து, வெற்றி மகு­டம் சூடி­னார் நெதர்­லாந்­தின் மேக்ஸ் வெர்ஸ்­டாப்­பன்.

செர்­ஜியோ பெரெஸ் இரண்­டா­வ­தாக முடித்ததால் ரெட்­புல் குழுவே முத­லிரு இடங்­களை­யும் பிடித்­தது. ஃபெராரி குழு­வின் கார்­லோஸ் செய்ன்ஸ் மூன்­றா­வ­தாக வந்­தார்.

பந்­த­யத்தை முடிக்க பெரெ­சைக் காட்­டி­லும் 17.841 நொடி­கள் குறை­வாக எடுத்­துக்­கொண்­டார் வெர்ஸ்­டாப்­பன்.

இரு­முறை உலக வெற்­றி­யா­ள­ரான ஃபெர்னாண்டோ அலோன்­சோ­வின் காரு­டன் தமது கார் மோதி­யதை அடுத்து, இடை­யி­லேயே பந்­த­யத்­தை­விட்டு வெளி­யே­றி­னார் ஏழு­முறை உலக வெற்­றி­யா­ள­ரான பிரிட்­ட­னின் லூயிஸ் ஹேமில்­டன்.

இந்­தப் பரு­வத்­தில் இது­வரை 14 பந்­த­யங்­கள் முடிந்­துள்ள நிலை­யில், அதில் ஒன்­ப­தில் வென்­றுள்­ளார் வெர்ஸ்­டாப்­பன்.

இன்­னும் எட்­டுப் பந்­த­யங்­கள் எஞ்­சி இருக்­கும் நிலை­யில், இப்­போது 284 புள்ளி­களு­டன் இரண்­டாம் இடத்­தில் இருக்­கும் பெரெ­ஸைக் காட்­டி­லும் 92 புள்­ளி­கள் கூடு­த­லா­கப் பெற்று முத­லி­டத்தை வலுப்­படுத்­திக்­கொண்­டுள்­ளார் வெர்ஸ்­டாப்­பன்.

இத­னால், இவ்­வாண்­டி­லும் இவரே உலக வெற்­றி­யா­ளர் பட்­டத்தை வெல்­வார் எனப் பெரி­தும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.