ஆறு மலேசிய மாநிலங்களில் தேர்தல் இருக்காது

ஆறு மலேசிய மாநிலங்களில் தேர்தல் இருக்காது

1 mins read

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வில் அடுத்த பொதுத் தேர்­தல் இவ்­வாண்டு நடை­பெற்­றால் எதிர்க்­கட்சிகள் ஆட்­சியிலி­ருக்­கும் ஆறு மாநி­லங்­களில் சட்­ட­சபை கலைக்­கப்­டாது என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. எதிர்க்­கட்­சித் தலை­வர்கள் இவ்­வாறு கூறி­யுள்­ள­னர்.

கிளந்­தான், திரங்­கானு, கெடா ஆகிய மாநி­லங்­கள் பாஸ் கட்­சி­யின் ஆட்­சி­யில் இயங்­கு­கின்­றன. அவற்றில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்­திற்கு முன்­பு சட்டசபை கலைக்­கப்­ப­ட­மாட்டா என்று பாஸ் கட்­சி­யின் தலை­மைச் செய­லா­ளர் டாக்­கி­யு­தீன் ஹசான் கூறி­னார்.

'பிஎன்' எனும் பெரிக்­கத்­தான் நேசி­யோனால் கூட்­ட­ணி­யில் பாஸ் கட்சி இடம்­பெ­று­கிறது.

மற்­றோர் எதிர்க்­கட்­சிக் கூட்­டணி­யான 'பிஹெச்' எனும் பக்­கத்­தான் ஹரப்­பா­னின் ஆட்­சி­யில் இருக்­கும் சிலாங்­கூர், பினாங்கு, நெகிரி செம்­பி­லான ஆகிய மாநி­லங்­க­ளி­லும் இதே நிலை­. எதிர்­பார்த்தபடி பொதுத் தேர்­தல் இவ்­வாண்டு இடம்­பெற்­றால் அவை அதில் போட்­டி­யி­ட­மாட்டா.

அடுத்த மாதம் ஏழாம் தேதி­யன்று மலே­சி­யா­வின் வர­வு­செ­லவுத் திட்­டம் அறி­விக்­கப்­ப­ட­வுள்­ளது. அதற்­குப் பிறகு பொதுத் தேர்­தலை விரை­வில் நடத்த பிர­த­மர் இஸ்­மா­யில் சாப்ரி திட்­ட­மிட்­டுள்­ள­தா­கக் கரு­தப்­ப­டு­கிறது.

இப்­போது பெரிக்­கத்­தான் நேசியோனால், பக்­கத்­தான் ஹரப்­பா­ன் ஆகி­ய­வற்­றின் இந்த முடிவு அதற்கு இடை­யூ­றாக அமையலாம் என்று சொல்­லப்­ப­டு­கிறது.

அடுத்த ஆண்டு செப்­டம்­பர் மாதத்­திற்­குள் பொதுத் தேர்­தலை நடத்­த­வேண்­டும்.

எனி­னும் அதற்கு இன்­னும் ஓராண்­டுக்கு மேல் இருக்­கும் வேளை­யில் தேர்­தல் இவ்­வாண்டு நடை­பெ­றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.