தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கூடுதல் சுற்றுப்பயணிகள் ஜப்பான் போகலாம்

1 mins read
217716f3-2569-4aef-835a-fc77332e2a8a
ஹிமெஜி நகரில் சுற்றுப்பயணிகளிடையே பிரபலமான ஹிமெஜி அரண்மனை. கோப்புப் படம்: ஏஎஃப்பி -

தோக்­கியோ: வழி­காட்­டி­கள் இடம்­பெ­றாத சுற்­றுலா திட்­டங்­களை வாங்­கு­வோர் இனி ஜப்­பா­னுக்கு சுற்­றுப்­ப­ய­ணம் மேற்­கொள்­ள­லாம். எல்லா நாடு­க­ளி­லி­ருந்தும் வருகை தரும் பய­ணி­க­ளுக்­கும் இது பொருந்­தும்.

மேலும், இது­வரை இருந்­த­தில் இரு மடங்­கிற்­கும் மேலான சுற்றுப்­ப­ய­ணி­களை இனி ஜப்­பான் அனு­ம­திக்­கவுள்ளது.

தற்­போது தின­மும் அதி­க­பட்­ச­மாக 20,000 பய­ணி­களை ஜப்­பான் வர­வேற்­கிறது. இம்­மா­தம் ஏழாம் தேதி முதல் இந்த எண்­ணிக்கை 50,000க்கு உயர்த்­தப்­படும் என்று அந்­நாட்­டுப் பிர­த­மர் ஃபுமியோ கிஷிடா நேற்று தெரி­வித்­தார்.

குறை­வாக இருக்­கும் ஜப்­பா­னின் யென் நாண­யத்­தின் மதிப்­பைத் தங்­க­ளுக்கு சாத­க­மா­கப் பயன்­ப­டுத்­திக்­கொள்ள விரும்­பும் சுற்­றுப்­ப­ய­ணி­களை ஈரக்க எல்­லைக் கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்­து­வ­தாகத் திரு கிஷிடா கூறி­னார்.

கடந்த ஜூன் மாதத்­தி­லி­ருந்து குறிப்­பிட்ட எண்­ணிக்­கை­யில் சுற்றுப்­ப­ய­ணி­களை அனு­ம­திக்க ஜப்­பா­னிய அர­சாங்­கம் முடி­வெ­டுத்­தது. வழி­காட்­டி­கள் இடம்­பெ­றும் சுற்­றுலா திட்­டங்­களை வைத்­தி­ருப்­போர் மட்­டுமே அந்­நாட்­டிற்கு சுற்றுப்­ப­ய­ணம் மேற்­கொள்­ள­லாம் போன்ற கடு­மை­யான விதி­மு­றை­கள் நடப்­பில் இருந்­தன.

சென்ற ஆண்டு 353,119 வெளி­நாட்­ட­வர் ஜப்­பா­னுக்­குப் பய­ணம் மேற்­கொண்­ட­னர். இந்த எண்­ணிக்கை, 2019ஆம் ஆண்டு பதி­வான 31.9 மில்­லி­ய­னைக் காட்­டி­லும் கணி­ச­மா­கக் குறைவு.

கொவிட்-19 சூழலில் உல­கில் ஆகக் கடு­மை­யான எல்லைக் கட்டுப்­பா­டு­களை செயல்படுத்திய நாடுகளில் ஜப்­பான் ஒன்று. இப்­போது அது கட்­டுப்­பா­டு­களை படிப்­படி­யா­கத் தளர்த்தி வரு­கிறது.

செப்­டம்­பர் ஏழாம் தேதி முதல் மூன்று முறை தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோர் ஜப்பானுக்குப் பய­ணம் மேற்­கொள்­வ­தற்கு முன்பு கொவிட்-19 பரி­சோ­தனை மேற்­கொள்­ளத் தேவை­யில்லை என்றும் திரு கிஷிடா சென்ற வாரம் அறிவித்திருந்தார்.